Published : 13 Jun 2016 09:57 AM
Last Updated : 13 Jun 2016 09:57 AM

கருப்புப் பண விவகாரம் ரூ.34 லட்சம் கோடி என்று கூறுவது மிகைப்படுத்தப்பட்டது: வருவாய் புலனாய்வு இயக்குநரகம் தகவல்

2004-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரையான காலக்கட்டத் தில் சுமார் 34 லட்சம் கோடி கருப்புப் பணம் இந்தியாவிலிருந்து வெளியேறியுள்ளது என்று அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச நிதி ஒருங்கிணைப்பு நிறுவனம் தெரிவித்திருப்பது மிகவும் மிகைப் படுத்தப்பட்டது என்று வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) உச்ச நீதிமன்றம் நியமித்த சிறப்பு விசாரணைக் குழுவிடம் தெரிவித்துள்ளது.

2004-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரையான காலக்கட்டத் தில் மிக அதிகமான கருப்புப் பணம் இந்தியாவிலிருந்து வெளி யேறியதாக புகார் எழுந்தது. இதுபற்றி விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், நீதிபதி எம்.பி,ஷா தலைமையில் ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை நியமித்தது.

இந்நிலையில், அமெரிக்காவில் வாஷிங்டன்னில் உள்ள சர்வதேச நிதி ஒருங்கிணைப்பு நிறுவனம், 2004 ம் ஆண்டு முதல் 2013 ம் ஆண்டு வரையான காலக்கட்டத் தில் வளரும் நாடுகளிலிருந்து கருப்புப் பணம் வெளியேறியதை பற்றி ஒரு அறிக்கை வெளியிட் டது.

அந்த அறிக்கையில் இந்தியாவி லிருந்து மொத்தம் 505 பில்லியன் டாலர் (தற்போதைய இந்திய மதிப்பில் சுமார் ரூ.34 லட்சம் கோடி) வெளிநாடுகளுக்கு அனுப்பப் பட்டிருக்கிறது என்று கூறியிருந்தது. அமெரிக்க நிறுவனம் அறிக்கை யில் கூறப்பட்டுள்ள கருப்புப் பணத்தின் மதிப்பு உண்மைதானா என்று ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்குமாறு கடந்த பிப்ரவரி 8-ம் தேதி சிறப்பு விசாரணைக்கு குழு வருவாய் புலனாய்வு இயக்குநரகத்துக்கு கடிதம் அனுப்பியது.

அதன்படி சர்வதேச நிதி ஒருங் கிணைப்பு கூறியது பற்றி வருவாய் புலனாய்வு இயக்குநரகம் விசாரணை நடத்தியது. 2004 முதல் 2013 வரை 34 லட்சம் கோடி ரூபாய் கருப்புப் பணம் இந்தியாவில் இருந்து வெளியேறியுள்ளது என்று கூறுவது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று என்று சிறப்பு புலனாய்வு இயக்குநரக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் உண்மை யில் எவ்வளவு கருப்புப் பணம் வெளியேற்றப்பட்டது பற்றி விசா ரிக்க அதிகாரிகள் அமெரிக்கா, சுவிட்சர்லாந்து போன்ற நாடுக ளுக்கு சென்றதாகவும் இதுபற்றி டிஆர்ஐ தனது அறிக்கையை சிறப்பு விசாரணைக் குழுவிடம் பகிர்ந்து கொண்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

சர்வதேச நிதி ஒருங்கிணைப்பு நிறுவனம் குறிப்பிட்டதை விட குறை வான கருப்புப் பணமே இந்தியா வில் இருந்து வெளியேறி இருக்க லாம் என்று தகவல்கள் தெரிவிக் கின்றன. மேலும் வர்த்தக ரீதியாக பண மோசடி மூலமாக இந்தப் கருப்புப் பணம் வெளியேறி இருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அதிகாரி கள் அடங்கிய குழு சென்று அனைத்து தகவல்களையும் ஆராய்ந்து பார்த்தால் மட்டுமே சரியான மதிப்பை கண்டறிய முடி யும். ஆனால் அந்த தொகை ரூ.34 லட்சம் கோடிக்கும் குறைவாகவே இருக்கும் என்று அந்த அதிகாரி கூறினார்.

கருப்புப் பணம் மதிப்பு தொடர் பான கேள்விக்கு பதிலளித்த சர்வ தேச நிதி ஒருங்கிணைப்பு நிறுவ னம், புள்ளிவிவரங்கள் அனைத்தும் உண்மையானது. இது தொடர்பான தகவல்கள் அனைத்தும் சர்வதேச செலாவணி நிதியத்திடம் இருந்து பெறப்பட்டது என்று அந்த நிறு வனம் கூறியிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x