

உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு அதிக மாசை வெளியிடாத பெட்ரோலை பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்) நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஸ்பீடு 97 எனும் பெயரிலான ஹை ஸ்பீடு ஆக்டோன் பெட் ரோலை இந்நிறுவனம் அறிமுகப் படுத்தியுள்ளது. வாகனத்தின் செயல் திறனை மேம்படுத்துவ தோடு சுற்றுச் சூழலையும் பாது காக்கும் வகையில் இந்த பெட்ரோல் உருவாக்கப்பட்டுள்ளது. இது எரி பொருள் சிக்கனமானது என்று பிபிசிஎல் நிறுவன தென்னிந்திய பொதுமேலாளர் பி.எஸ். ரவி தெரி வித்தார். சென்னையில் நடை பெற்ற அறிமுக விழாவில் `ஃபார் முலா 1’ கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, தனது வாகனத்துக்கு ஸ்பீடு 97 பெட்ரோலை நிரப்பிக் கொண்டு சிறப்பித்தார்.