வங்கி பங்குகளில் மியூச்சுவல் பண்ட் முதலீடு ரூ.1.26 லட்சம் கோடி

வங்கி பங்குகளில் மியூச்சுவல் பண்ட் முதலீடு ரூ.1.26 லட்சம் கோடி
Updated on
1 min read

மியூச்சுவல் பண்ட் மேனேஜர்கள் வங்கிப் பங்குகளில் தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றனர். இதுவரை இல்லாத அளவுக்கு வங்கிப் பங்குகளில் மியூச்சுவல் பண்ட் முதலீடு உயர்ந்திருக்கிறது. மார்ச் மாத நிலவரப்படி ரூ.1.26 லட்சம் கோடி வங்கிப் பங்குகளில் முதலீடு செய்யப் பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ரூ.80,468 கோடி வங்கிப் பங்குகளில் முதலீடு செய்யப்பட்டன.

கடந்த நிதி ஆண்டில் பல தனியார் வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் புதிய முதலீடுகள் இருந்தன. ஐசிஐசிஐ மற்றும் எஸ்பிஐ ஆகிய பங்குகளில் அதிக முதலீடு இருந்தன. மாறாக ஆக்ஸிஸ் வங்கியில் இருந்து முதலீடுகள் வெளியேறின. தவிர பொதுப்பங்கு வெளியீடுகள் மூலமாக ரத்னாகர் வங்கியில் மியூச்சுவல் பண்ட்கள் முதலீடு செய்தன. இதற்கு முன்பாக ரூ.1.19 லட்சம் கோடி வங்கி பங்குகளில் முதலீடு செய்திருந்ததே அதிக பட்ச தொகையாகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in