

விவசாயிகள் நலன்களைக் காக்கும் விதமாக உரங்கள் மீதான ஜிஎஸ்டி 12% வரியை 5% ஆகக் குறைத்துள்ளது மத்திய அரசு.
தற்போது உரங்கள் மீதான வரி விகிதம் 0-6% என்று பல்வேறு மாநிலங்களில் பல்வேறு விதமாக உள்ளது. ஆனால் ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி வரியின் கீழ் 12% வரி விதிக்கப்பட்டிருந்தது. தற்போது இது 5% ஆக ஜிஎஸ்டி கவுன்சில் குறைத்துள்ளது.
12% வரி விதித்தால் உரங்களின் விலை 50 கிலோ பை ஒன்றுக்கு ரூ.30 முதல் ரூ.120 வரை உயர வாய்ப்பிருக்கிறது. பஞ்சாப், ஹரியாணா, ஆந்திரா, ஆகிய மாநிலங்களில் மண் ஊட்டச் சத்துகளின் மீது வரி விதிப்பு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
விவசாய இடுபொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்தால் விவசாயிகள் நிலைமை இன்னமும் கூட கவலைக்கிடமாகும் என்று பல்வேறு விவசாய அமைப்புகள் மத்திய அரசிடம் முறையிட்டுள்ளன.
இதனையடுத்து உர அமைச்சகம் இந்த விவகாரத்தை நிதியமைச்சக கவனத்துக்குக் கொண்டு சென்று ஜிஎஸ்டி கவுன்சில் முன் வைக்க தற்போது 5% ஆகக் குறைத்துள்ளது.