

சரக்கு மற்றும் சேவை வரித் திட்டத்தை நாடு முழுதும் ஜூலை 1-ம் தேதி நடைமுறைப்படுத்த மாநில அரசுகள் ஒப்புதல் தெரிவித்துள்ளன.
சனியன்று நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் ஏற்கெனவே நிலுவையில் இருந்த விவகாரங்கள் சுமுகமாகத் தீர்த்து வைக்கப்பட்டன.
இது குறித்து கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக் செய்தியாளர்களிடம் கூறிய போது, “விதிகளை விவாதித்தோம் இப்போது அவை பூர்த்தி அடைந்து விட்டன. புதிய திட்டத்துக்கு மாறுவதற்கான விதிமுறைகள் தெளியப்பட்டன. இதனையடுத்து ஜூலை 1-ம் தேதி புதிய ஜிஎஸ்டி நடைமுறைப்படுத்த அனைவரும் ஒப்புக் கொண்டனர்.
1,200 சரக்குகள் மற்றும் 500 சேவைகள் மீதான 5, 12, 18 மற்றும் 28 சதவீதங்களுக்கான வரிவிகிதங்களை ஜிஎஸ்டி கவுன்சில் கடந்த மாதம் முடிவு செய்தது.
மம்தா பானர்ஜி, இந்தப் புதிய மறைமுக வரித்திட்டத்தை அதன் தற்போதைய வடிவத்தில் மேற்கு வங்கம் ஏற்றுக் கொள்ளாது அதனால் நடைமுறைப்படுத்தாது என்று ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தார்.