

தனியார் வங்கியான சிட்டி யூனியன் வங்கியின் நிகர லாபம் 12 சதவீதம் உயர்ந்து ரூ.126 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.113 கோடியாக இருக்கிறது. ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான 9 மாதங்களில் நிகர லாபம் 12 சதவீதம் உயர்ந்து ரூ.373 கோடியாக இருக்கிறது.
கடந்த காலாண்டில் வங்கியின் மொத்த வருமானம் ரூ.953 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.850 கோடியாக இருந்தது. முதல் 9 மாதங்களில் மொத்த வருமானம் ரூ.2,731 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.2,490 கோடியாக இருந்தது
வங்கியின் மொத்த வாராக்கடன் 2.98 சதவீதமாகும், நிகர வாராக்கடன் 1.72 சதவீதமாகவும் இருக்கிறது.