

ஐடி துறை நிறுவனமான ஜென்சார் டெக்னாலஜியின் புதிய தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர். 2016 பிப்ரவரி முதல் இந்த பொறுப்பில் இருக்கிறார்.
தகவல் தொழில் நுட்ப துறையில் 25 ஆண்டுகள் அனுபவமிக்கவர். முன்பு ஹெச்சிஎல் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் துணைத்தலைவர் பொறுப்பில் இருந்தவர். இந்த நிறுவனத்தின் லைப் சயின்ஸ் ஹெல்த்கேர் உள்ளிட்ட சில பிரிவுகளுக்கு சர்வதேச தலைவராக இருக்கிறார்.
ஐஐடி மும்பையில் மும்பையில் படித்தவர். நிறுவனத்தில் இணைந்த முதல் நாள் நிறுவனத்துக்காக ஒரு செயலியை அறிமுகப்படுத்தினார்.
டிஜிட்டல் துறையின் வருமானத்தை உயர்த்துவதற்காக லண்டனைச் சேர்ந்த ஃபூல்புரூப் என்னும் நிறுவனத்தைக் கையகப்படுத்தினார். இந்த துறையில் வாய்ப்புகள் இருக்கும்பட்சத்தில் புதிய நிறுவனங்களைக் கையகப்படுத்தும் திட்டத்தையும் வைத்திருக்கிறார்.