Last Updated : 24 Jul, 2016 11:35 AM

 

Published : 24 Jul 2016 11:35 AM
Last Updated : 24 Jul 2016 11:35 AM

ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வரிச் சலுகை, ஐபிஆர் சலுகை பெற எளிய முறை: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அறிவுசார் சொத்துரிமை (ஐபிஆர்) சலுகைகளைப் பெறுவதற்கு தொழில்கொள்கை மேம்பாட்டுத் துறையின் (டிஐபிபி) சான்றிதழ் இருந்தால் போதுமானது. தொழில் தொடங்கி நடத்துவதை எளிமை யாக்கும் நோக்கில் இது கொண்டு வரப்பட்டுள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

டெல்லியில் நடைபெற்ற மாநில ஸ்டார்ட்அப் இந்தியா மாநாட்டில் கலந்து கொண்டு அவர் பேசியது:

இதுவரையில் தொழில் தொடங் கும் இளம் தொழில்முனைவோர் அமைச்சகங்களுக்கிடையிலான வாரியத்தைத் தொடர்பு கொண்டு மிக நீண்ட நெடிய நடைமுறை களைப் பூர்த்தி செய்ய வேண்டும். அத்தகைய சோர்வடையச் செய்யும் நடைமுறைகளைக் களையும் நோக் கில் இப்புதிய முறை கொண்டு வரப்பட்டுள்ளது.

ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ் புதிதாகத் தொடங்கப்படும் தொழில்களுக்கு மூன்று ஆண்டு களுக்கு வரிச் சலுகை வழங்கப் படும். இது தவிர பல்வேறு சலுகை களும் இளம் தொழில்முனை வோருக்கு வழங்கப்படும்.

ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்குவதில் நிலவும் பல்வேறு இடர்பாடுகளைப் போக்கும் வகை யில் பல்வேறு அமைப்புகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது. குறிப்பாக நிறுவன தாரர்கள், முதலீட்டாளர்களிடையே நிலவும் பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படு கின்றன. இது தொடர்பாக தொழில் துறையினர், முதலீட்டாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் கூறினார்.

ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் விஷயத்தில் அரசின் தலையீடு அதிகமாக இருப்பதாக சிலர் விமர் சித்திருப்பது குறித்து பதிலளித்த அவர், இந்த விஷயத்தில் தொழில் முனைவோர் மற்றும் இத்துறை எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்க்கவே அரசு முயற்சிக்கிறது. குறிப்பாக வரிச் சலுகை அளித்து ஊக்குவிக்கத்தான் அரசு நடவ டிக்கை எடுக்கிறது.

அரசின் தலையீடு குறைவாக வும், நிர்வாக விஷயத்தில் அதிக கவனத்துடனும் இருப்பதையே விரும்புகிறது. இதன்மூலம் தொழில் தொடங்குவதற்கான ஆரோக்கி யமான சூழலைத் தோற்றுவிப்பதே எண்ணம் என்று அவர் குறிப்பிட்டார்.

எங்கெல்லாம் பணம் செலவழிக் கப்படுகிறதோ அதைக் கண்காணிக் கும் வேலையை மட்டுமே அரசு செய்கிறது. இந்த விஷயத்தில் வெளிப்படைத் தன்மையோடு செயல்படவும், வரிச் சலுகை எவற்றுக்கு, எந்த விஷயத்துக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தையும் சேகரிப்பதையே அரசு மேற்கொள்ளும். அளிக்கப் படும் சலுகைகள் மறுக்கப்பட்டாலோ அல்லது கால தாமதம் ஆனாலோ உரிய சலுகை கிடைப்பதற்காக கணக்கு பதிவேட்டு நடை முறையே அமைச்சகம் செய்து வருகிறது. இதனாலேயே அமைச் சகங்களுக்கிடையிலான வாரியம் ஏற்படுத்தப்படவில்லை என்றார்.

ஆய்வுப் பூங்கா உருவாக்குவது தொடர்பாக 7 பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. 16 டெக்னாலஜி பிசினஸ் இன்குபேட்டர் (டிபிஐ), ஸ்டார்ட் அப் மையங்கள் உருவாக்குவது தொடர்பாக 13 பரிந்துரைகளையும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் ஏற்படுத்தப்பட்ட தேசிய நிபுணர் ஆலோசனைக் குழு அளித்துள்ளது.

இந்த பரிந்துரைகள் அனைத் துமே நடப்பு நிதி ஆண்டிற்குள் செயல்படுத்தப்படும் என்றார்.

வரி மற்றும் அறிவுசார் சொத்து ரிமை (ஐபிஆர்) சார்ந்த சலுகை களைப் பெற வேண்டுமாயின் அமை சகங்களுக்கிடையிலான வாரியத் தின் சான்றிதழ் அவசியம். இந்த வாரியத்தில் டிஐபிபி இணைச் செயலர், அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை மற்றும் உயிரித் தொழில்நுட்பத் துறைகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்குவது தொடர்பான கருத்து களை தொடர்ந்து வழங்குவதன் மூலம் எதிர்காலத்தில் இத்துறையில் பல இளைஞர்கள் ஈடுபடுவர்.

ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பட்டியலில் அமெரிக்கா, இங்கி லாந்தைத் தொடர்ந்து இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் 4,400 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளன. அடுத்த நான்கு ஆண்டுகளில் இந்த எண் ணிக்கை 12 ஆயிரத்தைத் தொடும் என மதிப்பீடுகள் தெரிவிப்பதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

உலக அளவில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வெற்றி மிகக் குறைவாகவே உள்ளது. வெற்றி அளவு அரசின் ஆதரவோடு தொடர்புடையதல்ல. எந்த அரசாக இருந்தாலும் தொழில் புரிவதற்கு வாய்ப்பு அளித்து குறிப்பிட்ட உயரத்தை எட்ட தேவையான வரிச் சலுகைகளையும் அளிக்கும்.

நிறுவனங்கள் தங்களது சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் (சிஎஸ்ஆர்) ஒரு பகுதியாக கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து தொழில் முனைவுக்கான இன்குபேட்டர் களை அமைக்கும்படி 50 நிறுவனங் களிடம் டிஐபிபி கேட்டுக் கொண்டுள் ளது.

ராஜஸ்தான், கேரளம், தெலங் கானா, கர்நாடகம் உள்ளிட்ட மாநி லங்கள் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அமைக்க தங்கள் மாநிலத்தில் செய்யப்பட்டுள்ள வசதிகளை விரிவாக பட்டியலிட்டன.

இதுபோல ஒவ்வொரு மாநிலமும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார் நிர்மலா சீதாராமன்.

கடந்த ஜனவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்குவதற்கான சலுகைகளை அறிவித்தார். வரிச் சலுகை, அதிகாரிகள் தொல்லையில்லாதது போன்ற சூழல் உருவாக்கப்படும் என அறிவித்தார். மூலதன ஆதாயத்துக்கு வரிச் சலுகை மற்றும் ரூ. 10 ஆயிரம் கோடி நிதியம் உருவாக்கம் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x