

அனைத்து லாபமீட்டும் பொதுத்துறை நிறுவனங்களும் லாபத்தை சரியான வழியில் பயன்படுத்த நிதி அமைச்சகம் அறிவுரை வழங்கி இருக்கிறது. பங்குகளை திரும்ப வாங்குதல், அல்லது டிவிடெண்ட் வழங்குதல், போனஸ் பங்கு அல்லது பங்குகளை பிரிப்பது குறித்து பொதுத்துறை நிறுவனங்கள் பரிசீலனை செய்ய வெண்டும் என்று நிதி அமைச்சகம் கோரியுள்ளது. இது குறித்து பொதுத்துறை நிறுவனங்களுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
அதில் லாபமீட்டும் நிறுவனங் கள் நிகர லாபத்தில் 30 சதவீதம் டிவி டெண்ட் வழங்கலாம் அல்லது மதிப் பில் 5 சதவீதம் அளவுக்கு, இதில் எது அதிகமோ அந்த அளவுக்கு டிவிடெண்ட் வழங்கலாம்.
அதேபோல லாபமீட்டும் நிறுவ னங்கள் சந்தையில் தனது நிறுவன பங்குகளை திரும்ப வாங்க வேண் டும் அல்லது போனஸ் பங்குகள் வழங்கவேண்டும். இதன் மூலம் அந்த நிறுவனத்தில் அரசாங்கத் தின் பங்கு உயரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தவிர பங்கு பிரிப்பு குறித்து லாபமீட்டும் நிறுவனங்கள் யோசிக்க வேண்டும். ஒரு பங்கின் முக மதிப்பை விட புத்தகமதிப்பு 50 மடங்குக்கு மேல் இருக்கும் நிறுவனங்கள் பங்கு பிரிப்பு குறித்து பரிசீலனை செய்யலாம். இதன் மூலம் இந்த பங்குகளை சிறுமுதலீட்டாளர்கள் வாங்குவதற்கு வசதியாக இருக்கும். பங்குகளின் விலை அதிகமாக இருக்கும் போது சிறுமுதலீட்டாளர்கள் அந்த பங்குகளில் முதலீடு செய்ய முடியாத சூழல் ஏற்படும் என்று அந்த கடிதத்தில் கூறப்பட் டுள்ளது.
பொதுத்துறை நிறுவனங்கள் ரூ.2.6 லட்சம் கோடி அளவுக்கு ரொக் கமாக வைத்துள்ளன. இதனை சரியான வழியில் பயன்படுத்துவதற் காக இந்த பரிந்துரைகள் வழங்கப் பட்டிருப்பதாக நிதி அமைச்சக அதிகாரி ஒருவர் கூறினார்.