

பொதுத்துறை தொலைத் தொடர்பு நிறுவனமான மகாநகர் டெலிகாம் லிமிடெட் (எம்டிஎன்எல்) நிறுவனத்தின் கடன் சுமை ரூ. 2,005 கோடி யாகும். இது கடந்த நிதி ஆண்டு நிலவரமாகும். இந்நிறுவனத்தின் வருவாயைப் பெருக்க இந்நிறு வனத்துக்குச் சொந்தமான நிலங் கள் மற்றும் சொத்துகளை விற்க முடிவு செய்துள்ளதாக மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்தார்.
மக்களவையில் நேற்று எழுத்துமூலமான பதிலில் அவர் மேலும் கூறியதாவது: எம்டிஎன்எல் நிறுவனத்தின் வருமானத்தை அதிகரிக்க பல்வேறு வழிகளில் ஆராயப்பட்டு வருகின்றன. அதில் முதலாவதாக நிறுவனத்துக்குச் சொந்தமான நிலங்களை விற்பது குறித்தும் பரிசீலிக்கப்படுவதாக அவர் கூறினார்.
மொபைல் சேவையில் பிஎஸ்என்எல் பின்பற்றும் வழி முறைகளை எம்டிஎன்எல் நிறுவன மும் பின்பற்றுவது குறித்து ஆராய்ந்து வருவதாகக் கூறிய அவர் இந்நிறுவனம் கடந்த நிதி ஆண்டில் (2015-16) ரூ.2,005 கோடியை நஷ்டமாக சந்தித்துள் ளது. முந்தைய நிதி ஆண்டைக் காட்டிலும் நஷ்டம் குறைந்துள்ளது.
2013-14-ம் நிதி ஆண்டில் இந்நிறுவனம் ரூ.7,825 கோடி லாபம் ஈட்டியதாகக் குறிப்பிட்ட அவர், அலைக்கற்றையை ஏலத் தில் எடுத்ததன் மூலம் இந்நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருவதாகக் குறிப்பிட்டார். அது தவிர ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது உள்ளிட்டவற்றாலும் நிறுவனத்தின் செலவுகள் அதிகரித் துள்ளதாகக் கூறினார். 3ஜி அலைக்கற்றையை இந்நிறுவனம் ரூ. 11,097 கோடிக்கு வாங்கியதாக அவர் குறிப்பிட்டார்.