Published : 18 Jul 2016 10:36 am

Updated : 14 Jun 2017 14:54 pm

 

Published : 18 Jul 2016 10:36 AM
Last Updated : 14 Jun 2017 02:54 PM

பணவீக்கம் குறைவாக உள்ளது என்று எப்படி கூறுகிறீர்கள்?- விமர்சகர்களுக்கு ரகுராம் ராஜன் கேள்வி

பணவீக்கம் குறைவாக உள்ளது என்று எப்படி கூறுகிறீர்கள் என விமர்சகர்களுக்கு ரகுராம் ராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பணவீக்கம் குறைவாக உள்ளது என்று பொருளாதார விமர்சகர்கள் கூறி வரும் வேளையில் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், பணவீக்கம் குறைவாக உள்ளது என்று எப்படி கூறுகிறீர்கள்? என்று விமர்சகர்களுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விமர்சனங் கள் எல்லாம் வெற்று வார்த்தைகளே என்றும் ரகுராம் ராஜன் கூறியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ரகுராம் ராஜன் இதனை தெரிவித்துள்ளார்.

வட்டி விகிதத்தை குறைக்காமல் இருந்ததன் விளைவே வளர்ச்சி குறைந்ததற்கான காரணம் என்று ராஜன் மீது பொருளாதார விமர்சகர் கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். மேலும் நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) சார்ந்த பணவீக்கம் தொடர்ந்து நான்காவது மாதமாக உயர்ந்து ஜூன் மாதத்தில் 5.77 சதவீதமாக அதிகரித்துள்ளதை ரகுராம் ராஜன் தன்னுடைய நடவடிக் கைகளுக்கு சாதகமாக்கி கொள்வ தாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுபற்றி விளக்கமளித்த ரகுராம் ராஜன், பொருளாதாரத்தை அடிப்படையாக வைத்து இந்த குற்றச்சாட்டுகள் இல்லை. கடந்த வாரம் நுகர்வோர் விலைக் குறியீடு வெளிவந்துள்ளது. அவற்றை பார்க்கவேண்டும். நுகர்வோர் விலைக் குறியீடு சார்ந்த பணவீக்கம் 5.8 சதவீதமாக உள்ளது. நம்முடைய வட்டி விகிதம் 6.5 சதவீதமாக இருக்கிறது. வட்டி விகிதத்தை குறைத்திருந்தால் பணவீக்கம் குறைந்திருக்கும் என்று எப்படி கூறுகிறீர்கள் என்பதை விளக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது: பொருளாதாரத்தை மீட்டெடுப் பதில் நிறைய தடைகள் நிலவு கிறது. இரண்டு மிகப் பெரிய வறட்சி, உலக பொருளாதார மந்த நிலை, பிரெக்ஸிட் போன்ற விவகாரங்கள் மிகப் பெரிய தடைகளாக இருந்தன. ஆனாலும் இந்திய பொருளாதாரத்தின் செயல்பாடு கள் பொறுத்தவரை ஓரளவு சிறப் பாக இருந்துள்ளது. மேலும் பருவ மழை சிறப்பாக இருந்து அதே நேரத்தில் கட்டமைப்பு சீர்த்திருத் தங்கள் மற்றும் பேரியல் பொரு ளாதார ஸ்திரத்தன்மை ஆகிய வற்றை ஏற்படுத்தும் போது பொருளாதாரத்தின் வளர்ச்சி வேகம் பெறும்.

அனைவரையும் நிதிச் சேவை களுக்குள் கொண்டு வருவது பொறுத்தவரை, ஒவ்வொரு கிராமத்திற்கும் வங்கி கிளையை கொண்டுவருவது என்பது சாத்திய மில்லை. ஏனெனில் அப்படி அமைப்பது அதிகச் செலவுள்ளதாக இருக்கும். ஆனால் ரிசர்வ் வங்கி மொபைல் வங்கி, சிறிய வங்கிகள் போன்ற மாற்று வழிகள் குறித்து யோசித்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதற்கு முன் பாஜகவை சேர்ந்த சுப்ரமணியன் சுவாமி ரகுராம் ராஜனின் நிதிக் கொள்கைகள் பற்றி விமர்சித்திருந்தார். ரகுராம் ராஜன் மனதளவில் இந்தியராக செயல்படவில்லை என்று குற்றஞ்சாட்டி அவரை பதவிநீக்கம் செய்வதற்கு சுப்ரமணியன் சுவாமி முயன்றார். பல்வேறு தனிநபர் தாக்குதல்களையும் ரகுராம் ராஜன் மீது சுவாமி தொடுத்தார்.

அதன் பிறகு ரகுராம் ராஜன், தனது பதவிக் காலம் செப்டம்பர் 4-ம் தேதியோடு முடிவடைகிறது. இரண்டாவது முறை ரிசர்வ் வங்கி கவர்னராக தான் தொடரப்போவதில்லை என்று அறிவித்தார்.

அடுத்து பதவியேற்க போகும் ரிசர்வ் வங்கி கவர்னருக்கு நீங்கள் என்ன செய்தியை சொல்ல கூற விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு, நிதிக் கொள்கை கூட்டம் வரை காத்திருங்கள் என்று ராஜன் கூறியுள்ளார்.

ரிசர்வ் வங்கியின் அடுத்த நிதிக் கொள்கை கூட்டம் ஆகஸ்ட் 9-ம் தேதி நடக்க இருக்கிறது. இதுதான் ரகுராம் ராஜனுடைய கடைசி நிதிக் கொள்கை கூட்டமாகும்.அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

பணவீக்கம்ரகுராம் ராஜன்வட்டி விகிதம்பாஜகரிசர்வ் வங்கிசுப்பிரமணிய சுவாமி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author