

வருமான வரி விலக்கு உச்ச வரம்பை ரூ. 6 லட்சமாக உயர்த்த வேண்டும் என ரயில்வே பணியாளர்கள் சங்கம் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருக்கிறது. மேலும் போக்குவரத்து சலுகைகளுக்கும் விலக்கு அளிக்க வேண்டும் என இந்த சங்கம் கோரிக்கை விடுத்திருக்கிறது.
இந்த சங்கம் விடுத்துள்ள கோரிக்கைகள் வருமாறு:
வருமான வரி விலக்கு உச்சவரம்பை 6 லட்ச ரூபாயாக உயர்த்தகோரும் சமயத்தில் மூத்த குடிமக்களுக்கான வரம்பை ரூ. 7.5 லட்ச ரூபாயாக உயர்த்த வேண்டும். ரயில்வே துறையை பொறுத்த வரை ரயில்வே பயிற்சி மையம், ரயில்வே சமுதாயக்கூடம் மற்றும் பொழுதுபோக்கு மையத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். ரயில்வே துறையில் பணியாற்றும் பெண் பணியாளர்களுக்கு தனியாக ஓய்வறை அமைக்க வேண்டும், கிராமப்புற பகுதியில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் அவர் குடும்பங்களின் மருத்துவ வசதிக்காக மொபைல் வேன்கள் அமைக்கப்பட வேண்டும் என ரயில்வே பணியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்திருக்கிறது.
தற்போது வருமான வரி விலக்கு உச்சவரம்பு 2.5 லட்ச ரூபாயாக இருக்கிறது.