

கேரள மாநில அரசு கேரள வங்கி-யைத் தொடங்குவதில் தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக நபார் டின் முன்னாள் தலைமை பொது மேலாளர் வி.ஆர். ரவிந்திரநாத் தலைமையில் ஒரு செயல் குழுவை அம்மாநில அரசு நியமித்துள்ளது.
வங்கித் துறை, கூட்டுறவு மற்றும் ஐடி துறையிலிருந்து தலா ஒருவரைத் தேர்வு செய்து நான்கு பேரடங்கிய குழுவை உருவாக்க முடிவு செய்துள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
கேரள வங்கி அமைப்பது தொடர் பாக ஐஐஎம் பெங்களூரைச் சேர்ந்த எம்.எஸ். ராம் தலைமையிலான குழு கடந்த ஏப்ரலில் அறிக்கையை அளித்துள்ளது. இந்த அறிக்கை தொடர்பாக அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்க உள்ளதாக அவர் மேலும் கூறினார். அடுத்த 20 மாதங்களில் கேரள வங்கி தொடங்கப்பட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளதாக அவர் கூறினார்.
மாவட்ட கூட்டுறவு வங்கி மற்றும் மாநில கூட்டுறவு வங்கிகளை இணைத்து கேரள வங்கியை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்படி இணைப்பதன் மூலம் கூட் டுறவு வங்கிகளின் அடிப்படை இலக்கு எட்ட முடியாமல் போகும் என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச் சாட்டை அவர் மறுத்தார்.