

பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபியின் தற்போதைய தலைவர் யு.கே சின்ஹாவின் பதவிக் காலம் மார்ச் 2017 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பங்குச் சந்தை ஏற்ற இறக்கமாக இருந்து வரும் சூழ்நிலையில் சின்ஹா பதவியில் நீட்டிப்பதே சந்தையை வழிநடத்த சரியாக இருக்கும் என்பதால் மத்திய அரசு சின்ஹாவின் பதவி காலத்தை இரண்டாவது முறையாக நீட்டித்துள்ளது.
இந்த பதவிக்கு ஆர்பிஐ அதிகாரிகள் உள்ளிட்ட பல முக்கிய உயரதிகாரிகள் சுமார் 50 பேருக்கு மேல் விண்ணப்பித்திருந்த நிலையில் சின்ஹாவுக்கு பதவி நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது.
சின்ஹா முதல் முறையாக 2011 பிப்ரவரி மாதம் இந்த பதவியில் நியமிக்கப்பட்டார். மூன்று ஆண்டுகள் பதவிக் காலம் முடிவடைந்ததை அடுத்து மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு பதவி நீட்டிப்பு அளிக்கப்பட்டது, தற்போது மூன்றாவது முறையாக மார்ச் 2017 வரை பதவியில் நீட்டிக்க அரசு அனுமதித் துள்ளது.