

இந்தியப் பங்குச்சந்தைகளில் இன்றும் வர்த்தகம் வீழ்ச்சியுடன் தொடங்கியது. குறிப்பாக, வங்கி நிறுவனப் பங்குகள் கடும் சரிவைச் சந்தித்தன. மும்பை பங்குச்சந்தையில் காலை வர்த்தகம் தொடங்கும்போது, சென்செக்ஸ் 118.18 புள்ளிகள் சரிந்து 19,782.78 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 34.75 புள்ளிகள் குறைந்து 5,855 ஆக இருந்தது. எஸ்.பி.ஐ., பேங்க் ஆஃப் பரோடா, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஐசிஐசிஐ பேங்க், ஹெச்.டி.எஃப்.சி பேங்க், யெஸ் பேங்க் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன. சர்வதேச பங்குச்சந்தையில் நிலவும் சூழலின் எதிரொலியாக, இந்தியப் பங்குச்சந்தையிலும் சரிவு காணப்படுவதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.