Published : 26 Mar 2014 11:05 AM
Last Updated : 26 Mar 2014 11:05 AM

கடனுக்கான வட்டியை ஆர்பிஐ குறைக்கும்

வளர்ச்சியை ஊக்குவிப்பற்காக கடனுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி நிச்சயம் குறைக்கும் என்று மத்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா நம்பிக்கை தெரிவித்தார்.

நாட்டின் பணவீக்கம் குறைந்து வரும் நிலையில் இனி வளர்ச்சிக்கு உத்வேகம் கொடுக்கும் நடவடிக்கையில் ரிசர்வ் வங்கி கவனம் செலுத்தும். அந்த வகையில் ஏப்ரல் 1-ம் தேதி நடைபெற உள்ள காலாண்டு நிதிக் கொள்கையின்போது வட்டி குறைப்பு அறிவிப்பை ஆர்பிஐ வெளியிடலாம் என்று அவர் சுட்டிக் காட்டினார்.

கடந்த ஜனவரி 28-ம் தேதி நடைபெற்ற காலாண்டு நிதிக் கொள்கையின்போது கடனுக்கான வட்டி விகிதத்தை 7.75 சதவீதத்தி லிருந்து 8 சதவீதமாக ரிசர்வ் வங்கி உயர்த்தியது. பிப்ரவரி மாதத்தில் நாட்டின் பணவீக்க விகிதம் ஒட்டுமொத்த விற்பனை விலை அட்டவணையின்படி 4.68 சதவீதமாகக் குறைந்தது. கடந்த 9 மாதங்களில் பிப்ரவரி மாதத்தில்தான் 5 சதவீதத்துக்குக் கீழாக பணவீக்கம் குறைந்துள்ளது. இதேபோல சில்லறை பணவீக்கம் கடந்த 25 மாதங்களில் இல்லாத அளவாக 8.1 சதவீதமாகக் குறைந்தது.

கடந்த நிதி ஆண்டில் (2012-13) நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவாக 4.5 சதவீத அளவுக்குச் சரிந்தது. நடப்பு நிதி ஆண்டில் வளர்ச்சி 4.9 சதவீத அளவுக்கு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய பொருளாதார வளர்ச்சி ஒரு காலத்தில் 9 சதவீத அளவுக்கு உயர்ந்திருந்தது. அத்தகைய வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் நடப்பு நிதி ஆண்டுக்கான வளர்ச்சி மிகவும் குறைவானதாகும்.

பொருளாதார வளர்ச்சியை எட்ட வேண்டுமானால் தொழில்துறைக்கு வழங்கப்படும் கடனுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டும் என்று தொழில்துறையினர் கோரி வருகின்றனர்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் வட்டி குறைப்பு நடவடிக்கைகளுக்கு தேர்தல் ஆணையத்தின் அனும தியை ரிசர்வ் வங்கி பெற வேண்டுமா என்று செய்தியா ளர்கள் கேட்டதற்கு, இந்த விவகாரத்தில் ரிசர்வ் வங்கிக்கு முழு உரிமை உள்ளது; தேர்தல் நடைபெற உள்ளது என்றாலும் அரசு இயந்திரம் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டுதானே இருக்க வேண்டும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.

தேர்தல் நடத்தை விதிமுறை களை நாங்கள் மதிக்கிறோம். ரிசர்வ் வங்கியின் காலாண்டு நிதிக் கொள்கை என்பது அரசியல் சாசன விதிமுறைகளுக்குள்பட்டது என்று சர்மா சுட்டிக் காட்டினார். தேர்தல் நடத்தை விதிமுறை களை கடந்த 5-ம்தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி அரசு மக்களைக் கவரும் அறிவிப்புகளை வெளியிடக் கூடாது. மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கி மே 16-ம் தேதி வரை நாட்டின் பல பகுதிகளில் பல்வேறு கட்டங்களாக நடைபெற உள்ளது.

ஏற்கெனவே தனியார் நிறுவனங்கள் வங்கி தொடங்கு வதற்கான லைசென்ஸ் வழங்கு வதற்கு தேர்தல் ஆணையத்தின் அனுமதியை ரிசர்வ் வங்கி எதிர் நோக்கியுள்ளது. இந்நிலையில் காலாண்டு நிதிக் கொள்கை அறிவிப்புகளுக்கு தேர்தல் ஆணையத்தின் ஒப்பு தலைப் பெற வேண்டிய அவசியம் இருக்காது என்று அவர் குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x