

தனியார் துறை வங்கியான கரூர் வைஸ்யா வங்கியின் நூற்றாண்டு விழா இம்மாதம் 10-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும் தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர். தவிர வங்கியின் முக்கியமான வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள், பணியாளர்கள் உள் ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர் என வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி கே.வெங்கடராமன் தெரிவித்தார்.
எம்.ஏ வெங்கடராம செட்டியார் மற்றும் ஆதி கிருஷ்ணா செட்டியார் ஆகிய இருவரால் 1916-ம் ஆண்டு கரூரில் தொடங்கப்பட்டது. இரண் டாவது கிளை 1927-ம் ஆண்டு திண் டுக்கல் நகரில் தொடங்கப்பட்டது. 1977-ம் ஆண்டு 100-வது கிளை தொடங்கப்பட்டது. 1997-ம் ஆண்டு 200-வது கிளை தொடங்கப்பட் டது, 500-வது கிளை 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது, 1961 ஏடிஎம்கள் 683 கிளைகளுடன் வங்கி செயல்பட்டு வருகிறது.