

விழாக்காலம் தொடங்கியுள்ள நிலையில் சேவைகளை மேம்படுத்த 10,000 ஊழியர்களைப் பணியில் அமர்த்த பிளிப்கார்ட் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.
விழாக்காலங்களில் விற்பனையை உயர்த்த இ-காமர்ஸ் நிறுவனங்கள் சலுகைகளை அறிவிப்பது வழக்கம். பிளிப்கார்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நிதின் சேத் கூறும்போது, இந்த வருடம் விழாக்கால விற்பனை கடந்த வருடங்களை விட சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம். இதற்காக சேவைகளை மேம் படுத்த தற்காலிகமாக 10,000 நபர்களைப் பணியில் எடுக்க திட்டமிட்டிருக்கிறோம்.
மேலும் 800 பணியாளர்களை நீக்கும் திட்டம் இருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி இருக்கிறது. இந்த செய்தி முற்றிலும் அடிப் படை ஆதாரமற்றது. வரும் மாதங் களில் எந்த ஒரு குழுவிலும் பணி யாளர்களை நீக்கும் திட்டம் இல்லை. மாறாக முக்கியமான பிரிவுகளில் பணியாளர்களைத் தேர்வு செய்ய திட்டமிட்டிருக்கிறோம் என்று கூறினார்.
கடந்த ஜூலையில் சரியாக செயல்படாத பணியாளர்களை பிளிப்கார்ட் நீக்கியது. ஆனால் எத்தனை நபர்கள் நீக்கப்பட்டனர் என்பது குறித்த தகவலை பிளிப்கார்ட் வெளியிடவில்லை. ஆனால் 1,000 பணியாளர்கள் வரை நீக்கப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.