சி.ஏ.ஜி பணி - என்றால் என்ன?

சி.ஏ.ஜி பணி - என்றால் என்ன?
Updated on
1 min read

தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் (சி.ஏ.ஜி) பணி

அரசு பட்ஜெட் சரியாக நிர்வகிக்க ப்படுகிறதா என்பதைத் தணிக்கை செய்வதற்காக உருவாக்கப்பட்டதுதான் சி.ஏ.ஜி. இதன் தலைவர் நேரடியாக குடியரசு தலைவருக்கு நேரடியாகக் கட்டுப்பட்டவர். அவர் அரசுக்கு எந்தவிதத்திலும் கட்டுப்பட்டவர் கிடையாது.

அரசின் பட்ஜெட் பாராளுமன்றம் ஒப்புக்கொள்ளும் போது, அரசு வரி வருவாய் ஈட்டும் அதிகாரத்தை Finance Act என்ற சட்டமாக மாற்றி குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பப்படும். அதேபோல செலவு செய்யும் அதிகாரத்தை Appropriation Act என்ற சட்டமாக மாற்றி குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். இந்த இரண்டு சட்டங்களும் குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு பிறகு அரசுக்கு அனுப்பப்படும்.

இதில் ஒரு பிரதி சி.ஏ.ஜி.க்கும் அனுப்பப்படும். இந்த இரண்டு சட்டங்களிலும் இருப்பதுபோல வரி வசூலிக்கப்படுகிறதா, செலவு செய்யப்படுகிறதா என்ற அரசின் வரவு செலவு கணக்குகளை தணிக்கை செய்து ஓர் அறிக்கையை குடியரசு தலைவருக்கு சி.ஏ.ஜி. அனுப்பி வைக்கும். இவ்வாறு குடியரசு தலைவர் கொடுத்த அனுமதி சரியாக நடைமுறை படுத்தப்பட்டிருக்கிறதா என்பதை கண்காணிப்பதுதான் சி.ஏ.ஜி.யின் பணி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in