

அமெரிக்காவின் முன்னணி சில்லறை வர்த்தக நிறுவனமான வால்மார்ட் நிறுவனத்தின் இந்திய பிரிவின் தலைமை செயல்பாட்டு அதிகாரியாக (சி.ஓ.ஓ.) முரளி லங்கா நியமிகப்பட்டிருக்கிறார். இவரது இந்த நியமனம் டிசம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும்.
விற்பனையக செயல்பாடுகள், விற்பனை, வர்த்தக மேம்ப்பாடு, உறுப்பினர் சேர்க்கை, சந்தைப்படுத் துதல் உள்ளிட்ட பிரிவுகளுக்கு இவர் தலைமை தாங்குவார் என்று வால்மார்ட் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக் கப்பட்டிருக்கிறது.
இவர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சி.இ.ஓ) கிரிஷ் ஐயரின் கீழ் நேரடியாக செயல்படுவார்.
இந்தத் துறையில் முரளி லங்காவுக்கு இருக்கும் ஆழமான அறிவு, சர்வதேச அனுபவம் ஆகியவை நிறுவனத்துக்கு பயன்படும் என்று சி.இ.ஓ. கிரிஷ் ஐயர் தெரிவித்தார். மேலும் முரளி வால்மார்ட் நிறுவனத்தின் 25 வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்து வருகிறார். 1989-ம் ஆண்டு முரளி வால்மார்ட் நிறுவனத்தில் சேர்ந்தார். 2008-ம் ஆண்டு இந்திய செயல்பாட்டுக்கு தலைமை ஏற்க வந்தார். ஐந்து வருடங்கள் இருந்துவிட்டு 2008-ம் ஆண்டு மீண்டும் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தின் மண்டல பொதுமேலாளராக பொறுப்பேற்றார்.