

நாட்டில் ரூ.200 கோடிக்கு மேல் சொத்துள்ளவர்களின் எண் ணிக்கை அதிகரித்துள்ளதாக மத்திய நிதித்துறை இணையமைச் சர் சந்தோஷ் குமார் கங்வார் தெரிவித்துள்ளார்.
கடந்த நிதியாண்டின்படி, மொத்த சொத்து மதிப்பு ரூ.200 கோடிக்கு மேல் வைத்துள்ளவர் களின் எண்ணிக்கை 283 ஆக உயர்ந்துள்ளதாக மாநிலங்களவை யில் நேற்று எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில் கங்வார் தெரிவித்துள்ளார்.
கடந்த 2015-16 நிதியாண்டில் ரூ.200 கோடிக்கு மேல் சொத்து மதிப்பு கொண்டவர்களின் எண்ணிக்கை 195 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த சில வருடங்களாக இந்த எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. 2013-14 நிதியாண்டில் 200 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து மதிப்பு கொண்டவர்களின் எண்ணிக்கை 107 ஆக இருந்தது. பின்பு 2014-15ம் நிதியாண்டில் 134 ஆக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. ரூ.200 கோடிக்கும் மேல் சொத்து மதிப்பு கொண்டவர்களை, தனிநபர் வருமான வரி தகவலின்படி சேகரித்ததாக அமைச்ச்சர் தெரிவித்தார்.
மேலும் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளதா என்ற கேள்விக்கு, இதற்குரிய சரியான தகவல்கள் இல்லை என்று கங்வார் பதிலளித்துள்ளார்.
ஏழைகளை மேலும் ஏழைகளாக்கவும் பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்கும் வகையில்தான் இந்த நாட்டின் கொள்கைகள் இருக்கிறதா என்ற கேள்விக்கு, "அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில்தான் மத்திய அரசு கொள்கைகள் வகுத்து வருகிறது. மேலும் ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடை வெளியை குறைப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. முறைசார்ந்த பொரு ளாதாரம் தற்போது அதிகரித்து வருகிறது. கணக்கில் வராத பணம் குறைந்துள்ளது. பண மதிப்பு நீக்கத்தின் மூலம் எதிர்பார்த்தது நிறைவேறியிருக்கிறது. இதன் மூலம் ஏழைகளுக்கும் நடுத்தர மக்களுக்கும் வாய்ப்புகளையும் கொள்கைகளையும் உருவாக்க முடியும்’’ என்று காங்வார் பதிலளித் தார். மேலும் 2017-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி படி 48,48,641 வரி செலுத்துவோர்கள் ஜிஎஸ்டி போர்டலில் பதிவு செய்துள்ளனர் என்று தெரிவித்தார்.