Published : 07 Oct 2014 10:41 AM
Last Updated : 07 Oct 2014 10:41 AM

தாமஸ் பிகெட்டி - இவரைத் தெரியுமா?

$ பிரான்ஸ் நாட்டின் பொருளாதார பேராசிரியரான இவர், பாரிஸ் பொருளாதார கல்லூரியில் பொருளாதார பேராசியராக இருக்கிறார். பாரிஸ் பொருளாதார கல்லூரியின் இயக்குநராகவும் இருந்தவர்.

$ கடந்த ஆண்டு இவர் எழுதிய Capital in the Twenty-First Century புத்தகம் மூலம் இவருக்கு சர்வதேச அளவில் பெரிய அங்கீகாரம் கிடைத்தது.

$ தற்போது 43 வயதாகும் இவர் தன்னுடைய 22 வது வயதில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார். wealth redistribution-யை ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றார். கடந்த ஆண்டு வெளியான Capital in the Twenty-First Century இந்த புத்தகமும் 250 வருட சொத்து குவிதல் மற்றும் பகிர்தலை பற்றியதுதான்.

$ முனைவர் பட்டம் பெற்றவுடன் எம்.ஐ.டி (Massachusetts Institute of Technology) உதவி பேராசிரியராக பணிபுரிந்தார். 2002-ம் ஆண்டு இளம் பொருளாதார அறிஞர் எனும் விருதினை பிரான்ஸ் இவருக்கு வழங்கியது.

$ கணிதத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். புத்தகங்கள் மட்டுமல்லாமல், பொருளாதார நாளிதழ்களில் தொடர்ந்து கட்டுரையும் எழுதி வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x