Last Updated : 08 Jul, 2016 09:50 AM

 

Published : 08 Jul 2016 09:50 AM
Last Updated : 08 Jul 2016 09:50 AM

‘பிரீடம் 251’ ஸ்மார்ட்போன் இன்று முதல் விநியோகம்: அரசு உதவியை எதிர்பார்க்கும் ரிங்கிங் பெல்ஸ்

உலகின் குறைந்த விலை ஸ்மார்ட்போன் `பிரீடம் 251’ இன்று முதல் விநியோகம் செய்யப்பட உள்ளதாக ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நொய்டாவை தலைமையிட மாகக் கொண்ட ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் ரூ.251 க்கு ஸ்மார்ட் போனை விற்பனை செய்ய உள்ள தாக கடந்த பிப்ரவரி மாதம் அறிவித் தது. இது இந்திய அளவில் பெரிய சர்ச்சையை உருவாக்கி இருந்த நிலையில், `பிரீடம் 251’ ஸ்மார்ட்போனை ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் இன்று முதல் விநியோகம் செய்ய உள்ளது.

நிறுவனம் குறைந்த விலை ஸ்மார்ட்போனுக்கான முன்பதிவை அறிவித்ததும் சுமார் 7 கோடிக்கும் அதிகமானோர் முன்பதிவு செய்தனர். இந்த அறிவிப்புக்கு பின்னர் பல சர்ச்சைகள் எழுந்தன. `பிரீடம் 251; ஸ்மார்ட்போனில் லோகோ வேறு நிறுவனத்தின் காப்பி என சர்ச்சை உருவானது. அதனைத் தொடர்ந்து காவல்துறை வருமான வரித்துறையினர் சோதனைக்கும் அந்நிறுவனம் ஆளானது.

முன்பதிவு செய்துள்ள வாடிக் கையாளர்களுக்கு பணத்தை திரும்ப அளிப்பதற்கான நெருக்கடி யும் இந்த நிறுவனத்துக்கு உரு வானது. இதனால் வாடிக்கை யாளர்களுக்கு பணத்தையும் திரும்ப அளித்தது

கடந்த வாரம் 2 லட்சம் ஸ்மார்ட் போன்களுக்கான பேக்கிங் பணி கள் முடிந்துவிட்டன. இன்று முதல் விநியோகம் தொடங்கும் என்று இந்த நிறுவனத்தின் தலைவர் மோகித் கோயல் தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக 5,000 போன்கள் டெலிவரி செய்யப்படுகின்றன என்றும் கோயல் கூறினார்.

முன்னதாக ஜூன் 30 முதல் விநியோகம் செய்யப்படும் என்றும், முதற்கட்டமாக 19 மாநிலங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு 10 ஆயிரம் போன்கள் அனுப்பப்படும் என்றும் ஏற்கெனவே இந்த நிறு வனம் அறிவித்திருந்தது குறிப்பிடத் தக்கது. ஆனால் தற்போது 5,000 போன்களை அனுப்ப உள்ளதாகக் கூறியுள்ளது. வாடிக்கையாளர்கள் விநியோகக் கட்டணம் ரூ.40 சேர்த்து அளிக்கவேண்டும் என்றும் கோயல் கூறினார்.

இந்த ஸ்மார்ட்போன் தயாரிக்க ஒரு போனுக்கு ரூ.930 வரை நிறு வனத்துக்கு நஷ்டம் ஏற்படுகிறது என்று ஏற்கெனவே அளித்த செய்தியில் நிறுவனம் தெரிவித் திருந்தது. இந்த போனுக்கான பாகங்கள் தைவானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இதை தயாரிப்பதற்கு ரூ.1,180 செலவாகிறது. நஷ்டத்தில் பெரும் பகுதியை செயலி மேம்பாட்டாளர் கள் மற்றும் விளம்பர வருவாய் மூலம் ஈடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த வகையில் ஒரு போனுக்கு ரூ.700 முதல் ரூ.800 வரை நஷ்டத்தை ஈடு செய் யும். மேலும் தற்போது 2 லட்சம் போன்கள் தயாரிக்கப்பட்டு தயா ராக உள்ளன. இதற்கு எங்களுக்கு மத்திய அரசின் உதவி பக்கபல மாக இருந்தது என்றும் கோயல் குறிப்பிட்டார். அரசின் உதவி இல்லையென்றால் முன்பதிவு செய்திருந்த 2 லட்சம் வாடிக்கை யாளர்களுக்குமான ஸ்மார்ட் போனை அளிப்பதில் இன்னும் காலம் எடுத்திருக்கும் என்றும் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதற்கிடையே நிறுவனம் ரூ.699 முதல் 999 விலையில் நான்கு புதிய போன்களுக்கான அறிவிப்பையும், ரூ.3999 - 4499 விலையில் இரண்டு ஸ்மார்ட்போன்களுக்குமான அறி விப்பையும் வெளியிட்டுள்ளது.

குவாட்கோர் பிராசசர், 4 அங்குல தொடுதிரை, முன்பக்க மற்றும் பின்பக்க கேமரா என வசதிகள் கொண்ட ஸ்மார்ட் போன் ரூ. 251 க்கு என்பதை வியக்கத்தக்க வகையில் ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் சாதித் துள்ளது.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x