

லஷ்மி விலாஸ் வங்கியின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 50 சதவீதம் உயர்ந்து ரூ.60.68 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் இந்த வங்கியின் நிகர லாபம் ரூ.40.26 கோடியாக இருந்தது.
மொத்த வருமானமும் உயர்ந் திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.693 கோடியாக இருந்த மொத்த வருமானம், இப்போது ரூ.774.80 கோடியாக இருக்கிறது.
வங்கியின் மொத்த வாராக்கடன் சிறிதளவு குறைந்திருக்கிறது. கடந்த வருடம் ஜூன் காலாண்டில் 2.72 சதவீதமாக இருந்த மொத்த வாராக் கடன் இப்போது 2.14 சதவீதமாக இருக்கிறது. அதேபோல நிகர வாராக்கடனும் 1.72 சதவீதத்தில் இருந்து 1.3 சதவீதமாக சரிந்திருக் கிறது.
வாராக்கடனுக்காக ஒதுக்கீடு செய்த தொகையும் ரூ.50.31 கோடி யில் இருந்து ரூ.35 கோடியாக குறைந்திருக்கிறது. நேற்றைய வர்த்தகத்தில் 0.6 சதவீதம் குறைந்து 116 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிந்தது.