

தனியார்துறை வங்கியான டெவலப்மெண்ட் கிரெடிட் வங்கி நடப்பு நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் ரூ. 33.09 கோடி லாபம் ஈட்டியுள்ளது.
இது முந்தைய ஆண்டு இதே காலத்தில் வங்கி ஈட்டிய லாபத்தை விட 50 சதவீதம் அதிகமாகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் வங்கியின் லாபம் ரூ. 22.13 கோடியாக இருந்தது.
வங்கியின் மொத்த வருமானம் ரூ. 296 கோடியாக உயர்ந்தது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் வங்கியின் நிகர வருமானம் ரூ. 247.46 கோடியாகும். அரையாண்டில் வங்கியின் லாபம் 85 சதவீதம் அதிகரித்து ரூ. 75.91 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தை ஆண்டு இதே காலத்தில் வங்கியின் லாபம் ரூ. 41.01 கோடியாகும். முதல் அரையாண்டில் வங்கியின் மொத்த வருமானம் ரூ. 601 கோடியாகும்.
வங்கி லாபம் ஈட்டிய போதிலும் மும்பை பங்குச் சந்தையில் வங்கிப் பங்கு விலை 2.70 சதவீதம் சரிந்து ரூ. 50.50-க்கு விற்பனையானது.