

இந்தியா இ-காமர்ஸ் துறையில் முதல் பத்து இடங்களுக்குள் உள்ள நிறுவனமான ஆஸ்க்மி பஸார் மூடப்பட இருக்கிறது. இந்த நிறுவனத்தின் பெரும்பான்மை யான பங்குகளை வைத்திருக்கும் ஆஸ்ட்ரோ என்டர்டெயின்மென்ட், இந்த நிறுவனத்தில் செய்துள்ள முதலீடுகளை குறித்து பரிசீலனை செய்து வருதாகவும் இந்தியா வில் இருந்து வெளியேற திட்ட மிடுவதாகவும் தகவல்கள் வந்துள்ளன. இதுவரையில் இந்த நிறுவனம் லாபம் ஈட்டவில்லை.
நிறுவனம் மூடப்படுவதாக இதுவரையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் நிறுவனத்தில் பணிபுரியும் 4,000க்கும் மேற்பட்ட பணி யாளர்கள் வேறு வாய்ப்புகளை தேடிக்கொள்ளுமாறு அறிவுறுத்தப் பட்டிருப்பதாக தகவல்கள் தெரி விக்கின்றன.
மலேசியாவை சேர்ந்த முத லீட்டு நிறுவனமான ஆஸ்ட்ரோ, ஆஸ்க்மிபஸார் நிறுவனத்தின் தாய் நிறுவனமான கெட்இட் இன்போமீடியாவில் 95 சதவீத பங்குகளை வைத்துள்ளது.
ஆஸ்க்மி பஸார் நிறுவனத்தில் பெரும் முதலீடு செய்தபிறகும், அந்த நிறுவனத்தால் லாபமீட்ட முடியவில்லை என ஆஸ்ட்ரோ தெரிவித்திருக்கிறது. இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை பரிசீலனை செய்த ஆலோசகர்கள் இந்த நிறுவனம் மீண்டு வருவ தற்கான வாய்ப்புகள் குறைவு என்ற முடிவுக்கு வந்திருக்கின்றனர். இதனை தொடர்ந்தே ஆஸ்ட்ரோ வெளியேறும் முடிவுக்கு வந்தி ருக்கிறது.
ஆனால் ஆஸ்க்மி நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும் போது, நிறுவனத்தை மூடுவதோ அல்லது பணி இழப்பு உருவாக்குவதோ இந்த நடவடிக்கையின் நோக்கம் அல்ல, ஆஸ்ட்ரோ நிறுவனம் மாற்று திட்டங்களை ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும் நாங்கள் இணையதளத்தை மூடவில்லை, இப்போதைக்கு இணையதளம் மூலம் புதிய ஆர் டர்கள் எதையும் எடுப்பதில்லை என்றார்.
கடந்த 2010-ம் ஆண்டு ஆஸ்க்மி டாட் காம் தொடங்கப்பட்டது. 2012-ம் ஆண்டு ஆஸ்க்மிபஸார் இ-காமர்ஸ் இணையதளம் தொடங் கப்பட்டது. 2012-ம் ஆண்டு ஆஸ்க்மி நிறுவனத்தை கெட்இட் கையகப்படுத்தியது.
மலேசியாவை சேர்ந்த ஆனந்த கிருஷ்ணன் (ஆஸ்ட்ரோ ஹோல்டிங்ஸ் நிறுவனர்) 150 கோடி ரூபாயை கடந்த ஜூலையில் முதலீடு செய்திருந்தார். இந்த நிறுவனத்தில் சிபிஐ விசாரணை தொடங்கி இருப்பதால், இந்தியாவில் இருந்து வெளியேற ஆஸ்ட்ரோ திட்டமிட்டிருக்கிறது.
அதே சமயம் ஆஸ்ட்ரோ நிறுவனம் தன்னுடைய பொறுப்புகளை முடிக்கும் வரையில் இந்தியாவில் இருந்து வெளியேறகூடாது என கம்பெனி விவகாரத்துறை அமைச்சகத்துக்கு ஆஸ்க்மி கடிதம் எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கது.