

இந்தியாவின் நான்காவது மிகப்பெரிய நிறுவனமான ஹெச்சிஎல் டெக்னாலஜீஸ் ரூ.3,500 கோடிக்கு பங்குகளை திரும்ப வாங்குவதாக அறிவித்திருக்கிறது. ஒரு பங்கினை 1,000 ரூபாய்க்கு வாங்குவதாக அறிவித்திருக்கிறது. தற்போது வர்த்தகமாகும் விலையை விட 17 சதவீதம் அதிகமாகும். நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் இந்நிறுவன பங்கு 854 ரூபாயில் முடிவடைந்தது.
இந்திய ஐடி நிறுவனங்கள் வசம் உபரி தொகை அதிகமாக இருப்பதால், முதலீட்டாளர்களுக்கு டிவிடெண்ட் அளிப்பது மற்றும் பங்குகளைத் திரும்ப வாங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இம்மாத தொடக்கத்தில் டிசிஎஸ் நிறுவனம் ரூ.16,000 கோடிக்கு பங்குகளை திரும்ப வாங்குவதாக அறிவித்தது. இன்ஃபோசிஸ் நிறுவனமும் நடப்பு நிதி ஆண்டுக்குள் ரூ.13,000 கோடிக்கு பங்குகளை திரும்ப வாங்குவது அல்லது டிவிடெண்ட் வழங்க இருப்பதாக அறிவித்தது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் காக்னிசென்ட் நிறுவனமும் 340 கோடி டாலர் அளவுக்கு பங்குகளை திரும்ப வாங்கு வதாக அறிவித்தது.