ஊழியர்களுக்காக மர வீடுகளை கட்டுகிறது அமேசான்

ஊழியர்களுக்காக மர வீடுகளை கட்டுகிறது அமேசான்
Updated on
1 min read

இ-காமர்ஸ் துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் அமேசான் நிறுவனம் ஊழியர்களுக்கான மர வீடுகளை அமைத்து வருகிறது. சியாட்டிலில் உள்ள அமேசான் தலைமையிடத்துக்கு அருகில் ஒரு ஏக்கர் பரப்பளவில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாவரங்களை மர வீடுகள் அமைப் பதற்காக வளர்த்து வருகிறது.

அமேசான் நிறுவனம் இண்டர் நெட் ஷாப்பிங், எலெக்ட்ரானிக் புத்தகம் மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் போன்ற துறைகளில் இயங்கி வருகிறது.

தற்போது அடுத்த கட்டமாக மரவீடுகளை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. சிறிய அளவிலான மரவீடுகளையும் பெரிய அளவிலான மரவீடுகளையும் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த வீடுகள் அனைத்தும் கோள வடிவில் உள்ளன. மேலும் மேம்படுத்திய தொழிநுட்பங்களுடன் கொண்ட மர வீடுகளாக இருக்கும் என அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அமேசான் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜெப் பிஜோஸ் கூறுகையில், ``இன்று இவை சிறு விதைகளாக உள்ளன. ஆனால் இதுதான் எங்கள் நிறுவனத்தினுடைய மிகப் பெரிய தொழிலாக இருக்கப் போகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

தனித் தோற்றத்தை அளிக்கும் வீடுகளை உருவாக்க இருக்கிறோம். சியாட்டிலுக்கு புதிதாக வருபவர்களுக்கு இந்த மரவீடுகள் உதவியாக இருக்கும் என்று அமேசான் நிறுவனத்தின் ரியல் எஸ்டேட் பிரிவின் இயக்குநர் ஜான் ஸ்கோட்லர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in