Published : 11 Jun 2017 01:04 PM
Last Updated : 11 Jun 2017 01:04 PM

எஸ்பிஐ இணைப்பை தொடர்ந்து மற்ற பொதுத்துறை வங்கிகளை இணைக்க மத்திய அரசு திட்டம்

பாரத ஸ்டேட் வங்கியோடு அதன் துணை வங்கிகள் இணைப்பு வெற்றிகரமாக முடிந்ததை அடுத்து நடப்பு நிதியாண்டுக்குள் பிற பொதுத்துறை வங்கிகளை இணைப்பதற்கு மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் கள் வெளியாகியுள்ளன. சர்வ தேச அளவில் மிகப் பெரிய வங்கி களை உருவாக்கும் நோக்கத் தோடு பொதுத்துறை வங்கிகளை இணைப்பதற்கான வரைவுக்கு ஒப்புதல் அளிக்க மத்திய அமைச் சகம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஏப்ரல் மாதம் 1-ம் தேதி முதல் பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் ஐந்து துணை வங்கிகள் மற்றும் பாரதிய மகிளா வங்கி ஆகியவை இணைக்கப்பட்டன. இந்த இணைப்புக்கு பிறகு பாரத ஸ்டேட் வங்கி நாட்டின் மிகப் பெரிய வங்கியாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் சர்வதேச அளவில் மிகப் பெரிய 50 வங்கிகளில் பாரத ஸ்டேட் வங்கியும் உள்ளது. இதை உதாரணமாகக் கொண்டு மற்ற பொதுத் துறை வங்கிகளையும் இணைத்து சர்வதேச அளவில் பெரிய வங்கிகளாக உருவாக்க மத்திய நிதியமைச்சகம் திட்டமிட்டு வருகிறது.

‘‘வங்கிகள் இணைப்பு என்பது தேவையான ஒன்று. ஆனால் இணைப்பு தொடர்பாக முடிவெடுக் கும் போது வர்த்தக ரீதியிலான குறியீடுகளை மையமாக வைத்து மிக கவனமாக முடிவெடுக்க வேண்டும். வாராக்கடன் சூழ்நிலை யில் கொஞ்சம் முன்னேற்றம் ஏற்பட்டால் நடப்பு நிதியாண்டுக் குள் இன்னும் ஓர் வங்கி இணைப்பு ஏற்படலாம்’’ என்று மூ த்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் மதிப்பு ரூ.1 லட்சம் கோடியிலிருந்து 2016-17ம் நிதியாண்டின் ஏப்ரல்-டிசம்பர் காலாண்டில் ரூ.6.06 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. முக்கியமாக எரிசக்தி, உருக்கு தொழில், உள்கட்டமைப்பு, ஜவுளி ஆகிய துறைகளில் வாராக்கடன் அளவு அதிகமாக இருக்கிறது.

சர்வதேச அளவில் மிகப்பெரிய 5-6 வங்கிகள் இந்தியாவுக்கு தேவை. வங்கித் துறையில் உரிய நேரம் வரும் பொழுது அடுத்த இணைப்புகள் செய்யப்படும் என்று பல்வேறு நிகழ்ச்சிகளில் அருண் ஜேட்லி குறிப்பிட்டுள்ளார்.

`` பொதுத்துறை வங்கிகள் இணைப்பு நடைபெறும் பட்சத்தில் அனைத்து முதலீட்டாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலன் பற்றி கருத்தில் எடுத்துக் கொள் ளப்படும். மேலும் இணைப்பு நடைபெறுவதற்கு முன்பு பல்வேறு ஆணையம் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளின் ஒப்புதல் பெறப் பட வேண்டும்’’ என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

வரும் காலத்தில் வங்கித் துறையில் இணைப்புகள் மேற் கொள்ளவேண்டுமென்றால் சிசிஐ என்று சொல்லக்கூடிய நிறுவனங் களிடையே ஆரோக்கியமான போட்டியை உறுதி செய்யும் குழு (சிசிஐ) அமைப்பிடம் அனுமதி பெற வேண்டும் என்பது குறிப் பிடத்தக்கது. ஏனெனில் இணைப் பால் வங்கித்துறையில் ஒற்றைத் தன்மை ஏற்பட்டு விடக் கூடும்.

வங்கித்துறையில் அடுத்த இணைப்பு நடைமுறைப்படுத்து வதற்கு உள்ள வாய்ப்புகள் பற்றி ஆராயுமாறு நிதியமைச்சகம் நிதி ஆயோக் மற்றும் சர்வதேச ஆலோசனை நிறுவனத்திடம் கேட்டுக் கொண்டுள்ளது. இணைப்புகள் பற்றி பல்வேறு திட்டங்களை வரும் காலத்தில் நிதி ஆயோக் வழங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

``பொதுத்துறை வங்கிகளை இணைப்பதற்கு முன் பல்வேறு அடிப்படை கூறுகளை ஆராய வேண்டும். பிராந்திய சமநிலை, புவியியல் ரீதியாக தொடர்பு, நிதிச்சுமை, எளிதான மனித வள மாற்றம் (ஊழியர்கள்) என பல்வேறு கூறுகளை ஆராய்ந்தே பொதுத்துறை வங்கிகள் இணைப்பு பற்றி முடிவெடுக்க வேண்டும். மேலும் வங்கிகளை இணைக்கும் போது ஒரு வலுவான வங்கியோடு மிகவும் பலவீனமான வங்கியை இணைக்கக்கூடாது’’ என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x