Published : 12 Mar 2017 11:41 AM
Last Updated : 12 Mar 2017 11:41 AM

நடப்பு நிதி ஆண்டில் வரி இலக்கில் 81 சதவீதம் வசூல்

மத்திய அரசின் மொத்த வரி வருவாய் இலக்கில் பிப்ரவரி மாதம் வரை ரூ. 13.87 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் வரி வசூல் இலக்கு ரூ. 16.99 லட்சம் கோடியாகும். இதில் தற்போது 81.5 சதவீதம் வரை எட்டப்பட்டுள்ளது.

மறைமுக வரித் தொகை ரூ.7.72 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 22 சதவீதம் அதிகமான தொகையாகும். நிர்ணயிக்கப்பட்ட இலக்கு தொகையில் 91 சதவீதம் வசூலாகியுள்ளதாக நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள் ளது. நேரடி வரி வசூலைப் பொறுத் தமட்டில் 10.7 சதவீத வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.6.17 லட்சம் கோடி வசூலாகி யுள்ளது. பட்ஜெட் மதிப்பீட்டின்படி இது 72 சதவீதமாகும்.

தனி நபர் வருமான வரியைப் பொறுத்தமட்டில் ஏற்ற, இறக்க நிலை காணப்பட்டது. பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் சில தனி நபர்கள் தங்களது வருமான விவரத்தைத் தாக்கல் செய்துள்ளனர். நிறுவன வருமான வரி 11.9 சதவீதம் உயர்ந்துள்ளதாக மத்திய நேரடி வரி விதிப்பு வாரியம் (சிபிடிடி) தெரிவித்துள்ளது.

ரீஃபண்ட் 40% உயர்வு

வரி செலுத்தி அதன் பிறகு உரிய கணக்கை தாக்கல் செய்து ரீஃபண்ட் பெறுவது 40% அதிகரித்துள்ளது. ஏப்ரல் 2016 முதல் பிப்ரவரி 2017 வரையான காலத்தில் ரீஃபண்ட் பெறப்பட்ட தொகை முந்தைய ஆண்டைக் காட்டிலும் 40.2 சதவீதம் அதிகமாகும்.

சேவை வரி வசூல் 20 சதவீதம் உயர்ந்து ரூ. 2.21 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது. சுங்க வரி 5.2 சதவீதம் அதிகரித்து ரூ.2.05 லட்சம் கோடியாக உள் ளது. பிப்ரவரி மாதத்தில் மறைமுக வரி 8.4 சதவீதம் உயர்ந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x