

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (ஆர்-காம்) நிறுவனமும் ஏர்செல் நிறுவனமும் இணைய உள்ளன. இதற்கான முடிவை இரு நிறு வனங்களும் நேற்று எடுத்துள்ளன. ரூ.65,000 கோடி மதிப்புள்ள சொத்துகள் புதிய நிறுவனத்தின் வசம் இருக்கும். புதிய நிறுவனத்தில் ஆர்-காம் மற்றும் மேக்ஸிஸ் கம்யூனிகேஷன்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்கு தலா 50 சதவீதமாக இருக்கும்.
வாடிக்கையாளர் எண்ணிக்கை மற்றும் வருமான அடிப்படையில் புதிய நிறுவனம் இந்தியாவின் நான்காவது பெரிய நிறுவனமாக இருக்கும். புதிய நிறுவனத்தின் மதிப்பு ரூ.35,000 கோடி ஆகும். தவிர ஸ்பெக்ட்ரம் அலைவரிசை வைத்திருப்பதில் 2-வது இடத்தில் இந்த நிறுவனம் இருக்கும்.
இதன் மூலம் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் கடன் ரூ.20,000 கோடியும், ஏர்செல் கடன் ரூ.4,000 கோடியும் குறையும் என மதிப்பிடப் பட்டிருக்கிறது. புதிய நிறுவனத் தில் 18 கோடி வாடிக்கையாளர்கள் இருப்பார்கள்.
புதிய நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் இரு நிறுவனங்களுக்கும் சமமான எண்ணிக்கையில் இயக்குநர்கள் இருப்பார்கள். புதிய நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி யார் என்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.