Published : 15 Feb 2017 10:07 AM
Last Updated : 15 Feb 2017 10:07 AM

இவரைத் தெரியுமா?- ஆண்டனி போவெய்ர்

ராணுவ பாதுகாப்பு கருவிகளை தயாரிக்கும் பிரான்சைச் சேர்ந்த எம்பிடிஏ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. 2007-ம் ஆண்டு ஜூன் மாதத் திலிருந்து இந்த பொறுப்பில் உள்ளார். இந்த நிறுவனம் இந்திய ராணுவத்துக்குத் தேவையான உதிரிபாகங்களை அளித்து வருகிறது.

2002-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை, ஏர்பஸ் குழுமத் தின் பாதுகாப்பு மற்றும் விண்வெளி பிரிவு நிறுவனமாக இணைந்த அஸ்ட்ரியம் சாட்டிலைட்ஸ் நிறுவனத்தில் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்தவர்.

யூரோகாப்டர் நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவின் செயல் துணைத் தலைவராகவும், ஏரோஸ் பேஷியல் நிறுவனத்தில் பயணிகள் விமான பிரிவின் இயக்குநராகவும் பொறுப்பு வகித்தவர்.

ஏடிஆர் ஜிஐஇ விமான தயாரிப்பு நிறுவனத்தில் இண்டஸ்ட்ரியல் இயக்குநர், செயல்பாட்டு பிரிவு தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்தவர்.

பிரான்சில் உள்ள எகோல் பாலிடெக்னிக் கல்வி நிறுவனத்தில் பொறியியல் பட்டமும், எகோல் தேசிய நிர்வாகவியல் கல்லூரியில் உயர்கல்வியும் முடித்தவர்.

எல் அண்ட் டி நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து ஏவுகணை தயாரிப்பில் ஈடுபட ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x