இபிஎப் பயனாளிகள் ஆதார் எண் பதிவு செய்வது கட்டாயம்

இபிஎப் பயனாளிகள் ஆதார் எண் பதிவு செய்வது கட்டாயம்
Updated on
1 min read

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் (இபிஎப்) கீழ் பயன்பெறும் அனைத்து ஓய்வூதியதாரர்களும் சந்தாதாரர்களும் தங்களது ஆதார் எண்ணை இந்த மாத இறுதிக்குள் கட்டாயம் பதிய வேண்டும் என்று தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் (இபிஎப்ஓ) தெரிவித்துள்ளது.

தற்போது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் 50 லட்சம் ஓய்வூதியதாரர்களும் 4 கோடி சந்தாதாரர்களும் பயன்பெற்று வருகின்றனர். இந்தப் பயனாளிகள் மேற்கொண்டு தங்களது சேவைகள் தொடர் வதற்கு ஆதார் எண்ணை கட்டா யம் பதிவுசெய்ய வேண்டும் என்று இபிஎப்ஓ ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இபிஎப்ஓ அமைப்பின் ஆணையர் வி.பி.ஜாய் கூறியதாவது:

இபிஎப்ஓ அமைப்பின் சேவைகளைத் தொடர்ந்து பெற வேண்டுமெனில் அனைத்து ஓய் வூதியதாரர்களும், சந்தாதாரர் களும் வரும் 31-ஆம் தேதிக்குள் ஆதார் எண் அல்லது ஆதார் எண் பெறுவதற்கு விண்ணப்பித்துள்ள படிவத்தின் நகலை அளிக்க வேண்டும். இந்த மாத இறுதிக்குப் பிறகு சூழலைப் பொறுத்து கால அவகாசம் நீட்டிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்றார்.

ஆதார் எண்ணைத் தெரிவிக்க வேண்டியது குறித்து நாடு முழுவதும் உள்ள ஓய்வூதியதாரர் களுக்கும், சந்தாதாரர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று 120 மண்டல அலுவலகங்களுக்கு இபிஎப்ஓ அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in