சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைப்பதிலிருந்து விலகிக் கொள்ள 4 நிறுவனங்களுக்கு அனுமதி

சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைப்பதிலிருந்து விலகிக் கொள்ள 4 நிறுவனங்களுக்கு அனுமதி
Updated on
1 min read

நான்கு சிறப்பு பொருளாதார மண்டலங்களை (எஸ்இஇஸட்) அமைப்பதிலிருந்து விலகிக் கொள்ள அந்த திட்டத்தை முன் வைத்த நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பிராட்வே இண்டகிரேடட் பார்க் மற்றும் வெரிடாஸ் இன்பிராஸ் ட்ரெக்சர் டெவலெப்மெண்ட் உள் ளிட்ட நிறுவனங்கள் முன்வைத்த நான்கு புதிய பொருளாதார மண் டல திட்டங்களை விலக்கிக் கொள்ள அவர்களுக்கு அனுமதிக்கப்பட் டுள்ளது. வர்த்தகத்துறை செயலர் ரீடா தியோஷியா தலைமையில் ஆகஸ்ட் 12-ம் தேதி நடந்த இயக்கு நர்கள் குழு அனுமதி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் குழு அனுமதி கூட்டத்தில் முக்கியமாக இந்த நான்கு எஸ்இஇஸட் திட்டங்களின் முதல்கட்ட அனுமதியை ரத்து செய்வது மற்றும் விலகி கொள்வதற்கான அனுமதியை அறிவிப்பது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன என்று ஆய்வுகூட்ட முடிவுகள் தெரிவிக்கின்றன.

எனினும் இந்த அனுமதி விலக்கல் நடவடிக்கைக்கு மேம்பாட்டு அதி காரி அறிக்கையை நிறுவனங்கள் பெற வேண்டும். குறிப்பாக எஸ்இஇஸட் அமைக்க முன்வந்த நிறுவனங்கள் வரிகள் மற்றும் இதர சலுகைகளை, சேவை வரி விலக்கு கள் உள்ளிட்டவற்றில் எந்த நிலுவை களும் இல்லை என பரிந்துரை கடிதம் வாங்க வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் எஸ்இஇசட் சட்டத்தின்படி அந்த சலுகைகளை திரும்ப அளிக்க வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

முந்த்ரா ரியாலிட்டி மற்றும் பிராட்வே இண்டகிரேடட் பார்க் உள்ளிட்ட மேம்பாட்டாளர்கள் தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைக்க திட்டமிட்டிருந்தன. வெரிடாஸ் இன்ப்ராஸ்ட்ரெக்சர் டெவலெப்மெண்ட் மற்றும் சலோனி பிசினஸ் பார்க் உள்ளிட்ட மேம்பாட்டு நிறுவனங்கள் உயிரி தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க முன்வரைவு அளித்திருந்தன.

நாட்டில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் முக்கிய ஏற்றுமதி மையங்களாக உள்ளன. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 16 சதவீதம் எஸ்இஇசட் மூலமாக நடக்கிறது

இந்த சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு முதலீடு செய்ய ஆர்வமாக உள்ள முதலீட்டாளர் களை அணுக வர்த்தக அமைச்சகம் உரிய நடவடிக்கைகளை எடுக்கும். வரிச் சலுகைகளை அதிகரிப்பது மற்றும் குறைந்தபட்ச மாற்று வரியை குறைப்பது உள்ளிட்ட சலுகைகளை வழங்க நிதியமைச் சகத்துடன் பேசியுள்ளது. அனுமதி யளிக்கும் இயக்குநர் குழுவில் உள்ள 19 உறுப்பினர்கள் எஸ்இஇசட் விவகாரங்களை கையாளுகின்றனர்.

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மூலமான ஏற்றுமதி 0.77 சதவீதம் உயர்ந்து 2015-16ம் நிதியாண்டில் ரூ.4.67 லட்சம் கோடியாக உள்ளது. 2014-15ம் நிதியாண்டில் 204 எஸ்இ இசட்கள் மூலம் ரூ.4.63 லட்சம் கோடிக்கு ஏற்றுமதியானது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா மற்றும் மஹாராஷ்டிர மாநிலங்களில் அதிக எண்ணிக்கையில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in