Last Updated : 24 Aug, 2016 10:14 AM

 

Published : 24 Aug 2016 10:14 AM
Last Updated : 24 Aug 2016 10:14 AM

ஆர்பிஎல் வங்கி ஐபிஓ: 70 மடங்கு கூடுதல் விண்ணப்பம்

ஆர்பிஎல் வங்கியின் பொதுப் பங்கு வெளியீட்டுக்கு வங்கி நிர் ணயித்த இலக்கை விட 70 மடங்கு கூடுதலாக விண்ணப்பங்கள் வந்துள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் தனியார் வங்கி பொதுப் பங்கு வெளியீட்டுக்கு இந்த அளவு கூடுதல் விண்ணப்பங்கள் வந்தது இதுவே முதல் முறையாகும்.

மொத்தம் 2,63,73,00,965 பங்கு கள் கோரி விண்ணப்பங்கள் வந் துள்ளன. மொத்தமே 3,79,01,190 பங்குகளுக்குத்தான் வங்கி விண் ணப்பங்களை கோரியிருந்தது.

தகுதி வாய்ந்த நிறுவனங்கள் ஒதுக்கீட்டில் 85 மடங்கு கூடுதல் விண்ணப்பங்கள் வந்துள்ளன. அதேசமயம் நிறுவம் அல்லாத முதலீட்டாளர்களிடமிருந்து 198 மடங்கு விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில்லரை முதலீட்டாளர்களிட மிருந்து 5.58 மடங்கு கூடுதல் விண்ணப்பங்கள் வந்துள்ளன. மொத்தம் ரூ. 60 ஆயிரம் கோடிக்கு 10 லட்சத்து 2 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன.

கடந்த வாரம் ஆர்பிஎல் வங்கி ரூ. 364 கோடி மதிப்புக்கு 1.61 கோடி பங்குகளை ஒவ்வொன்றும் ரூ. 225 விலையில் ஒரு முதலீட்டாளருக்கு விற்பனை செய்தது. இப்போது வெளியாகியுள்ள பொதுப்பங்கு விலை ரூ. 224 முதல் ரூ. 225 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

ஆர்பிஎல் வங்கி புதிய பங்கு வெளியீடு மூலம் ரூ. 832 கோடியும், ஒஎப்எஸ் எனப்படும் ஆபர் ஃபார் சேல் அடிப்படையில் ரூ. 380.46 கோடியும் திரட்ட உத்தேசித்துள்ளது.

இதற்கு முன்பு 2005-ம் ஆண்டு யெஸ் வங்கி பொதுப் பங்கு வெளியீட்டில் இறங்கியது. இதையடுத்து பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி 2010-ம் ஆண்டில் பங்கு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x