

தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஐ-கேட் தலைவரின் ஆண்டு சம்பளம் ரூ. 14 கோடி. இந்நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக இன்ஃபோசிஸ் நிறுவனத்திலிருந்து வந்து சேர்ந்துள்ளார் அசோக் வெமுரி. கடந்த திங்கள் கிழமை (செப்.16) பொறுப்பேற்ற இவரின் ஆண்டு சம்பளம் 13 லட்சம் டாலாரகும் (ரூ. 8.2 கோடி).
அத்துடன் செயல்பாட்டு அடிப்படையிலான ஊக்கத் தொகை போனஸ் ஆண்டுக்கு 10 லட்சம் டாலராகும் (ரூ. 6.3 கோடி) இத்தகவலை நிறுவனம் பங்குச் சந்தைக்கு அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. இவை தவிர இவர் விரும்பினால் நிறுவனத்தின் 1.5 லட்சம் பங்குகளை பணியாளர்களுக்கான சலுகை விலையில் வாங்கலாம். இன்ஃபோசிஸ் நிறுவனத்திலிருந்தபோது இவரது ஊதியம் 9 லட்சம் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.