

தொழில் நிறுவனங்கள் கழிவு நீர் சுத்திகரிப்பு வசதிகளை அமைத்துக் கொள்ள வேண்டியது கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தொழிலகக் கழிவு நீரை சுத்திகரிக்காமல் ஆற்றில் கலக்க விடுவதற்கு எதிராக உச்ச நீதிமன்றம் கடுமையான கட்டுப் பாடுகளை விதித்துள்ளது. அடிப் படை கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் வைத்திராத தொழில்நிறு வனங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டாம் என்றும், அந்த நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்புமாறும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ். கெஹர் தலைமையிலான அமர்வு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை அனைத்து தொழில் நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும், சுத்திகரிப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொள் ளாத நிறுவனங்கள் மீது மாசு கட்டுப் பாட்டு வாரியம் சட்ட நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளது. இந்த அமர் வில் நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், கே.எஸ்.கவுல் இருந்தனர்.
நீதிபதிகள் தங்களது உத்தரவில், தொழில் நிறுவனங்களுக்கு மூன்று மாத கால அவகாசம் கொடுத் துள்ளதுடன், மாசு கட்டுப்பாட்டு வாரியம் இது தொடர்பாக தொழில் நிறுவனங்களுக்குச் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது. கழிவு சுத்திகரிப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொள்ளாத நிறுவனங்களை தொடர்ந்து இயங்க அனுமதிக்கக் கூடாது என்றும், தவறிழைக்கும் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு மற்றும் இதர வசதிகளை அரசு அமைப்புகள் துண்டிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
அடிப்படை சுத்திகரிப்பு அமைப்பு களை ஏற்படுத்திக் கொண்ட பிறகுதான் தொழில் நிறுவனங்களை இயக்க வேண்டும் என்றும் கூறினர். மேலும், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி மற்றும் உள்ளூர் அமைப்புகள், பொது சுத்திகரிப்பு மையத்தை மூன்று ஆண்டுகளுக்குள் அமைக்கவும் உத்தரவிட்டுள்ளது.
தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு இது தொடர்பாக அறிக்கையை மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுப்பி இருந்தது. மேலும் உள்ளூர் அமைப் புகள் பொது சுத்திகரிப்பு மையம் அமைப்பதற்கான செலவுகளை சமாளிக்க அவற்றை பயன்படுத்து வோர்களிடமிருந்து வரி வசூலித்துக் கொள்ளவும் நீதிபதிகள் ஆலோசனை கூறியுள்ளனர்.
நீதிமன்றம் இதற்கு முன்னதாக மத்திய வனம் மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சகம், மத்திய மாசு கட்டுப்பட்டு வாரியம், 19 மாநிலங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
நிலத்தடி நீர் மற்றும் நீராதாரங்கள் மாசுபடுவதைக் கட்டுப்படுத்த வேண்டும் என பர்யவரன் சுரக் ஷா சமிதி என்கிற தன்னார்வ அமைப்பு மனுதாக்கல் செய்திருந்தது. இந்த மனு குஜராத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள் மீது நடவடிக்கை கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்தது, ஆனால் தற்போது இந்த உத்தரவை அனைத்து மாநிலங்களில் உல்ள நிறுவனங்களுக்கும் நீதிபதிகள் பிறப்பித்துள்ளனர்.