

ஆப்பிள் நிறுவனத்தின் ஆலை இன்னும் 30 நாட்களுக்குள் பெங்களூருவில் அமையும் என கர்நாடக தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பிரியங் கார்கே தெரிவித்தார். இது தொடர்பாக அமைச்சர் மேலும் கூறியதாவது: இன்னும் ஒரு மாதத்துக்குள் ஆப் பிள் நிறுவனத்தின் அதிக விலை யுள்ள ஐபோன்கள் பெங்களூரு வில் தயாராகும். தைவானை சேர்ந்த உற்பத்தி நிறுவனமான விஸ்டர்ன் கார்ப்பரேஷன் ஆப்பிள் நிறுவனத்துக்கு உதவி செய்யும்.
இந்தியாவிலேயே ஐபோன்கள் தயாரிப்பதால் ஐபோன்களின் விலை குறையும். இதனால் வேக மான வளரும் இந்திய சந்தையில் ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை பங் களிப்பு உயரும். இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசு, மத்திய அரசுடன் விவாதித்து வருகிறது. ஆப்பிள் நிறுவனமும் இது தொடர் பாக மத்திய அரசிடம் பேசி வருகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் கோரிக்கையை மத்திய அரசு நிரா கரித்து விட்டது. ஆனால் ஆப்பிள் நிறுவனத்துக்கு மட்டும் பிரத்யேக சலுகைகளை வழங்க வேண் டாம். உயர ரக ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு ஏற்றவாறு சலு கைகள் இருக்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை விடுத் திருக்கிறோம். அப்போதுதான் சீனா மற்றும் தைவான் ஆகிய நாடு களுடன் போட்டி போட இயலும்.
இந்த நிறுவனங்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும். குறைந்த பட்சம் பத்து ஆண்டு கள் வழங்கினால் மட்டுமே போன் கள் மற்றும் உதிரிபாகங்களை உள் நாட்டிலே உற்பத்தி செய்துகொள்ள முடியும். தற்போது இந்த சூழ்நிலை இல்லாததால் மத்திய அரசு கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கூறினார்.
ஆப்பிள் நிறுவனம் உதிரி பாகங்களை இறக்குமதி செய் வதற்கு வரிச்சலுகை கோரியிருந் தது. இது போன்ற சில கோரிக் கைகளை மத்திய அரசு நிரா கரித்துவிட்டது.
இந்தியாவில் ஸ்மார்ட்போன் உற்பத்தி ஆலை அமைப்பது தொடர்பாக ஆப்பிள் நிறுவனத்தின் கோரிக்கைகள் அனைத்தையும் அரசு ஏற்க வில்லை என்று மத்திய வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதா ராமன் கடந்த வாரம் பதில் அளித் திருந்தார்.
இந்தியாவில் உற்பத்தி செய்யப் படும் ஆப்பிள் ஸ்மார்ட்போன் களுக்கு உற்பத்தி வரிச் சலுகை, பழுது பார்க்கும் பிரிவுகளுக்கு சலுகை, உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு சலுகை உள்ளிட்டவற்றை 15 ஆண்டுகளுக்கு அளிக்க வேண் டும் என ஆப்பிள் நிறுவனம் அரசிடம் எதிர்பார்க்கிறது.
இது தவிர உள்ளூர் தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து 30 சதவீத அளவுக்கு உதிரி பாகங்களைக் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற கட்டாய விதிமுறையிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரியிருந்தது.
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இந்திய சட்டங்களுக்கு ஏற்ப எப்படி செயல்படுவது என்பதை கற்றுக்கொள்ள ஸ்டேஸில்லா விவகாரம் உதவும் என்றும் அமைச்சர் கூறினார்.