

டீசல் வாகன புகை மோசடியில் சிக்கினாலும் உலக அளவில் அதிக கார்களை விற்பனை செய்து முதலிடத்தைப் பிடித்துள்ளது ஃபோக்ஸ்வேகன். டீசல் வாகன புகை மோசடியில் ஃபோக்ஸ் வேகன் நிறுவனத்துக்கு அமெரிக் காவில் மட்டுமின்றி உலக அளவில் மிகப் பெரிய அவப் பெயர் ஏற்பட்டது. இருப்பினும் 2016-ம் ஆண்டில் இந்நிறுவனம் 1.03 கோடி கார்களை விற்பனை செய்துள்ளது.
ஜப்பானின் டொயோடா நிறுவ னம் 1.01 கோடி கார்களை விற்பனை செய்துள்ளது. அமெரிக் காவைச் சேர்ந்த ஜெனரல் மோட் டார்ஸ் நிறுவனம் 95 லட்சம் கார்களை விற்பனை செய்து 3-வது இடத்தைப் பிடித்துள்ளது.
2015-ம் ஆண்டில் ஃபோக்ஸ் வேகன் நிறுவனம் 95 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு விற்பனை 3.8 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே போல டொயோடா நிறுவனத்தின் விற்பனை 1.3 சதவீதம் அதிகரித் துள்ளது. 2015-ல் இந்நிறுவனம் 1 கோடி கார்களை விற்பனை செய்துள்ளது.
ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் 2008-ம் ஆண்டு வரை தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்தது. இதன்பிறகு முதலிட அந்தஸ்தை டொயோடாவிடம் இந்நிறுவனம் இழந்தது. 2011-ம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி தாக்குதலால் டொயோடா கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிறுவனத்துக்கு சப்ளை செய்யும் நிறுவனங்களும் பாதிக் கப்பட்டன. இதனால் உற்பத்தி பாதிக்கப்பட்டு விற்பனையில் முதலிட நிலையை ஜெனரல் மோட்டார்ஸிடம் இழந்தது.
சீனாவில் ஃபோக்ஸ்வேகன் தயாரிப்புகளுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டதைத் தொடர்ந்து விற்பனையில் கடந்த ஆண்டு முதலிடத்தை பிடித்துள்ளது. சீனாவுக்கு மட்டும் ஒரு லட்சம் கார்களை இந்நிறுவனம் தயாரித்து அனுப்பியுள்ளது. எஸ்யுவி பிரிவில் ஃபோக்ஸ்வேகன் தயாரிப்பு களுக்கு கடும் கிராக்கி ஏற்பட் டதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு இந்நிறுவனத்தின் அட்லஸ் மாடல் கார்களின் விற்பனை அதிகரித் துள்ளது. ஐரோப்பிய சந்தையில் ஸ்கோடா கோடியாக் மாடல் கார் கள் மிகவும் பிரபலமாக இருந்தன. 2017-ம் ஆண்டிலும் இந்நிறு வனத்தின் தயாரிப்புகளுக்கு அதிக கிராக்கி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.