

உலகில் அதிக அளவில் சைக்கிள்களைத் தயாரிக்கும் ஹீரோ நிறுவனம் சிறுவர்களுக்காக டிஸ்னி மற்றும் மார்வல் பிராண்ட் சைக்கிள்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த சைக்கிள்களில் மிக்கி மௌஸ், ஸ்பைடர்மேன் உள்ளிட்ட சிறுவர்களைக் கவரும் பொம்மைகள் இடம்பெறும்.
மூன்று வயது முதல் 12 வயது பிரிவினருக்காக இந்த சைக்கிள்களை ஹீரோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்காக டிஸ்னி இந்தியா நிறுவனத்துடன் ஹீரோ நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் 12 மாடல்களில் சைக்கிள்களை இந்நிறுவனம் தயாரித்து விற்பனைக்கு அளித் துள்ளது. இவற்றின் விலை ரூ. 3,300 முதல் ரூ. 4,500 வரையாகும்.
மிக்கி அண்ட் பிரன்ட்ஸ், டிஸ்னி பிரின்சஸ், டிஸ்னி, பிக்ஸர் கார்ஸ், மார்வல் ஸ்பைடர் மேன் உள்ளிட்ட பெயர்களில் இவை வெளிவந்துள்ளன. இவை 30 நகரங்களில் விற்பனைக்குக் கிடைக்கும். இன்றைய தலைமுறை குழந்தைகள் தங்களது விருப்பத் துக்கேற்ப சைக்கிள் இருக்க வேண்டும் என்று கருது கின்றனர். இவர்களின் தேவைகளை ஓரளவு பூர்த்தி செய்யும் வகையில் கார்ட்டூன் கதாபாத்திரங்களைக் கொண்ட சைக்கிள்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஹீரோ நிறுவனம் தெரிவித் துள்ளது.
முதல் கட்டமாக ஒரு லட்சம் சைக்கிள்கள் டிஸ்னி அன்ட் மார்வல் தயாரிக்கப்படும். இரண் டாம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 5 லட்சமாக உயர்த்தப்பட்டு மூன்றாம் ஆண்டில் 10 லட்சம் சைக்கிள்கள் தயாரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.