

நாட்டின் பெரிய ஐடி நிறுவன மான டிசிஎஸ், சந்தையில் வர்த்தக மாகும் பங்குகளில் கணிசமான பங்குகளை திரும்ப வாங்கும் திட் டத்தில் இருக்கிறது. நிறுவனத் தின் இயக்குநர் குழு, அடுத்த வாரத்தில் இது குறித்து விவா திக்க இருக்கிறது. இந்திய ஐடி நிறுவனங்களிடம் அதிக தொகை இருக்கிறது. பயன்படுத்தப்படா மல் இருக்கும் இந்த தொகை குறித்து பங்குதாரர்கள் தங்களது அச்சத்தை தெரிவித்து வருகின்ற னர்.
கடந்த டிசம்பர் மாத இறுதி நிலவரப்படி டிசிஎஸ் வசம் ரூ.43,169 கோடி இருக்கிறது. அதனால் பங்குகளை திரும்ப வாங்கும் திட்டத்தை பரிசீலனை செய்வதாக டிசிஎஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு முக்கிய ஐடி நிறுவனமான காக்னிசென்ட் 340 கோடி டாலர் அளவுக்கு பங்குகளை திரும்ப வாங்குவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து டிசிஎஸ் நிறுவனமும் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. ஆனால் எவ்வளவு தொகைக்கு வாங்குகிறது என்னும் தகவலை வெளியிடவில்லை. 20-ம் தேதி நடக்கும் இயக்குநர் குழுவில் இந்த முடிவு எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (இன்னும் சில நாட்களில் டாடா சன்ஸ் தலைவராக பொறுப்பேற்க இருக்கிறார்) என்.சந்திரசேகரன் கூறும்போது, முதலீட்டாளர்கள் டிவிடெண்ட் குறித்தும், பங்குகளை திரும்பவாங்குதல் குறித்தும் கேட்டிருக்கிறார்கள். முதலீட்டாளர்களின் கேள்விகளை இயக்குநர் குழுவில் விவாதிக்க இருக்கிறோம். மேலும் கடந்த சில ஆண்டுகளாக கூடுதல் டிவிடெண்ட்களை வழங்கி வருகிறோம் என்றார்.
கடந்த வாரம் இன்ஃபோசிஸ் நிறுவனம் பங்குகளை திரும்ப வாங்க வேண்டும் என்ற கோரிக் கையும் கேட்க முடிந்தது. இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி வி.பாலகிருஷ்ணன் கூடுதலாக இருக்கும் தொகையை பயன்படுத்தி பங்குகளை திரும்ப வாங்கலாம் என்று தெரிவித்திருந் தார். ரூ.12,000 கோடிக்கு பங்கு களை திரும்ப வாங்கலாம் என்பது குறித்த தகவல்கள் வெளியானது. இருந்தாலும் இன்ஃபோசிஸ் நிறு வனம் இதனை மறுத்துவிட்டது.
பங்குகளை திரும்ப வாங்கு வது குறித்த தகவல் வெளியான தால் டிசிஎஸ் பங்கு 1.4 சதவீதம் அளவுக்கு உயர்ந்து முடிந்தது.