

வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 42.66 புள்ளிகள் உயர்ந்து 20,419.22 புள்ளிகளாகவும், நிப்டி 12.25 புள்ளிகள் உயர்ந்து 6,075.45 புள்ளிகளாகவும் இருந்தன.
ஆசிய பங்குச்சந்தையின் வர்த்தகத்தின் ஏற்றம் இந்திய பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்திருந்தன.
கடந்த 4 வர்த்தக தினங்களில், சென்செக்ஸ் 167.30 புள்ளிகள் அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அந்நியச் செலாவணிச் சந்தையில்,வர்த்தக துவக்கத்தின் போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 18 காசுகள் உயர்ந்து 62.10 என்ற நிலையில் இருந்தது.