

இந்தியாவில் முதல் முறையாக வர்த்தக ரீதியாக மரபணு மாற்றப் பட்ட கடுகு விதைக்கு மத்திய அரசு அனுமதி அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச் சகத்தின் கீழ் இயங்கும் மரபணு தொழில்நுட்ப அனுமதியளிக்கும் குழு இதை தெளிவுபடுத்தியுள்ளது. இந்த தொழில்நுட்பத்துக்கு நாடு முழுவதும் பரவலான எதிர்ப்பு இருந்து வருவதால் இறுதி முடிவு அறிவிக்கவில்லை.
உள்நாட்டிலேயே மரபணு மாற்றப்பட்ட கடுகு விதைக்கு தொழில் நுட்ப ரீதியாக அனுமதிகள் ஆகஸ்ட் 11-ம் தேதி அன்று அளிக்கப்பட் டுள்ளன. மத்திய அரசின் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மரபணு தொழில் நுட்ப அனுமதியளிக்கும் குழு மற்றும் வல்லுநர்கள் கடந்த பத்து ஆண்டுகளாக பயிரிடப்பட்ட விவரங் களின் அடிப்படையில் இந்த அனுமதியை அளித்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக மத்திய சுற்றுசூழல் அமைச்சர் அனில் மாதவ் தேவ் இந்த முடிவை பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ளார். இந்த செய்தி வரும் அதே வேளையில் இந்திய மரபணு மாற்ற பருத்தி விதைகள் சந்தையில் மிகப் பெரிய நிறுவனமாக உள்ள மான்சாண்டோ மத்திய அரசின் கடுமையான கட்டுப்பாடுகளை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து கருத்து கூறியுள்ள மத்திய அமைச்சர் தேவ், அரசு விவசாயிகளின் எண்ணங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று கூறி யுள்ளார். மரபணு மாற்றப்பட்ட கடுகு விதைக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், மத்திய அரசு விவசாயத்தை பிரதான துறை யாக பார்க்கிறது என்றும், இந்திய விவசாயிகளின் நலன்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கை களையும் எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.