

அமெரிக்க நிதி நிறுவனங்கள் தங்களது முதலீட்டை குறைத்திருப்பதால் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்தின் பங்குகள் நேற்று ஒரே நாளில் தேசிய பங்குச் சந்தையில் 4.85 சதவீதம் சரிவடைந்துள்ளது.
டிசிஎஸ் நிறுவனத்திற்கு அமெ ரிக்க நிதி நிறுவனங்கள் வாடிக்கை யாளர்களாக இருந்து வருகின்றன. இந்த நிதி நிறுவனங்கள் தற்போது தங்களது முதலீட்டை குறைத்துள்ளன. இதனால் டிசிஎஸ் பங்குகள் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.
ஆகஸ்ட் மாத தகவலின்படி அமெரிக்காவில் உள்ள நிதி மற்றும் வங்கித் துறையில் இயங்கி வரும் நிறுவனங்கள் தங்களது முதலீட்டை குறைத்திருப்பதால் வாடிக்கையாளர்கள் அதீத எச் சரிக்கையுடன் இருந்து வருகின்ற னர். இதன் காரணமாக சரிவு ஏற்பட்டுள்ளதாக டிசிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.
முதலீட்டாளர்களின் இந்த அச்சத்தின் காரணமாக நேற்றைய வர்த்தகத்தில் டிசிஎஸ் நிறுவனத் தின் பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் அதிகபட்சமாக 6.5% அளவுக்கு சரிந்தன. இதனால் 31,527 கோடி ரூபாய் அளவுக்கு நிறுவனத்துக்கு இழப்பு ஏற்பட் டுள்ளது. நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் மட்டும் 5.14% சரிவைக் கண்டது. சென்செக்ஸ் மற்றும் நிப்டி ஆகிய இரண்டு குறியீடுகளும் உயர்ந்திருந்தாலும் டிசிஎஸ் நிறுவனத்தின் பங்குகள் சரிவைக் கண்டன.
இந்தியாவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு வெளிப்பணி ஒப்படைப்பு (அவுட் சோர்சிங்) துறையில் அமெரிக்கா மிகப் பெரிய சந்தையாக திகழ் கிறது. 1,50,000 கோடி டாலர் அளவுக்கு அமெரிக்காவிலிருந்து வெளிப்பணி ஒப்படைப்பு (அவுட்சோர்சிங்) செய்யப்படு கின்றன.
தகவல் தொழில்நுட்ப துறை யில் முதல் காலாண்டை விட இரண் டாவது காலாண்டில் வருவாய் குறைவாக இருக்கும் என கடந்த வாரத்தில் மைண்ட்ரீ நிறுவனம் கூறியிருந்தது. தற்போது உள்ள சூழலில் இரண்டாவது காலாண்டில் உத்தேசித்துள்ளதை விட தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் வருவாய் குறைவான அளவையே எட்டும். மேலும் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு 2016-17 நிதியாண்டு மிக கடினமானதாக இருக்கும் என சந்தை வல்லுநர்கள் நினைப்பதாக மைண்ட்ரீ நிறுவனம் தெரிவித்திருந்தது.
பணப் பரிமாற்றம், திட்டங்கள் ரத்தாவது போன்றவைதான் இதற்கு காரணங்களாக இருக்க முடியும். மேலும் எங்களுடைய ஆய்வின்படி 2017-ம் நிதியாண்டில் தகவல் தொழில்நுட்ப துறை மிகப் பெரிய சரிவைக் காணும் என்றும் மைண்ட்ரீ குறிப்பிட்டிருந்தது.
மிகப் பெரிய நிறுவனங்களான இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ ஆகியவை முதல் காலாண்டு முடிவுகள் குறித்து அதிருப்தியில் உள்ளன.
இருப்பினும் வளர்ச்சி கணிப்பை மாற்றுவதற்குரிய உடனடி காரணங்கள் ஏதும் இல்லாததால் அடுத்த நிதி ஆண்டில் தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சி 10 சதவீதம் முதல் 12 சதவீதமாக இருக்கும் என்ற கணிப்பில் தொழில்துறை அமைப்பான நாஸ்காம் மாற்றம் எதுவும் செய்யவில்லை.