

மும்பை பங்குச்சந்தையில், சென்செக்ஸ் இன்று காலை துவக்க நேர வர்த்தகத்திலேயே 100 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 21,000 புள்ளிகள் என்ற நிலையை அடைந்தது. நேற்று வர்த்தக நேர முடிவின் போது சென்செக்ஸ் 358.73 புள்ளிகள் உயர்ந்து 21,029.26 என்ற வலுவான நிலையிலேயே முடிந்திருந்தது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 30.00 புள்ளிகள் உயர்ந்து 6,250.90 புள்ளிகள் என்ற நிலையில் இருந்தது.
வங்கிகள், ஆட்டோமொபைல் துறை மீதான முதலீடுகள் அதிக அளவில் இருந்ததை அடுத்து சென்செக்ஸ் 21,000 புள்ளிகளை எட்டியதாக சந்தை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐ.சி.சி.ஐ. வங்கி, எஸ்.பி.ஐ. பெல், பார்தி ஏர்டெல், பஜாஜ ஆட்டோ, டாக்டர் ரெட்டி லெபாரட்டரிஸ், எச்.டி.எஃப்.சி,டி.சி.எஸ். நிறுவன பங்குகள் லாப போக்கில் வர்த்தகமாகி வருகின்றன.