

`டாக்ஸி பார் ஷூர்’ நிறுவனத்தின் செயல்பாட்டினை மூட ஓலா நிறுவனம் முடிவெடுத்திருக்கிறது. 18 மாதங்களுக்கு முன்பு டாக்ஸி பார் ஷூர் நிறுவனத்தை 20 கோடி டாலர் கொடுத்து ஒலா வாங்கியது குறிப்பிடத்தக்கது. தொழில்மேம்பாடு, சேவை பிரிவு உள்ளிட்ட சில பிரிவுகளில் 700 பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டாக்ஸி பார் ஷூர் நிறுவனத்தை வாங்கியதன் காரணமே குறைவான கட்டணத்தில் அந்த நிறுவனம் செயல்படுகிறது என்பதால்தான். இப்போது ஓலா மைக்ரோ தொடங்கப்பட்டுவிட்டதால், அனைத்து டாக்ஸி பார் ஷூர் ஓட்டுனர்கள் வாடிக்கையாளர்கள் என அனைவரும் ஓலா செயலிக்கு வந்துவிட்டனர். அதனால் டாக்ஸி பார் ஷூர் நிறுவனம் மூடப்பட்டது என ஓலா தெரிவித்துள்ளது.
முன்னதாக ஓலா நிறுவனம் மைக்ரோ என்னும் பிரிவை அறிமுகப்படுத்தியது. அந்த சேவை இப்போது 90 நகரங்களுக்கு விரிவுப் படுத்தப்பட்டுள்ளது. எவ்வளவு பணி யாளர்கள் வேலை இழப்பார் கள் என்னும் தகவலை ஓலா வெளி யிடவில்லை. ஆனால் பெரும்பா லான டாக்ஸி பார் ஷூர் பணியாளர் களை ஓலாவில் பயன்படுத்திக் கொள்வோம் என தெரிவித்துள்ளது.
சந்தையை உயர்த்திக்கொள் ளும் நோக்கில் கடந்த வருடம் மார்ச் மாதம் டாக்ஸி பார் ஷூர் நிறுவனத்தை ஓலா வாங்கியது.
டாக்ஸி பார் ஷூர் நிறுவனம் 2011-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஐஐஎம் அகமதாபாத்தில் படித்த ரகுநாதன் மற்றும் ஏ.ராதாகிருஷ்ணா ஆகிய இருவரால் தொடங்கப்பட்டது. இதில் ஆக்செல் பார்ட்னர்ஸ், ஹீலியன் வென்ச்சர்ஸ் உள்ளிட்ட சில வென்ச்சர் கேபிடல் நிறுவனங்கள் முதலீடு செய்தன.
எக்ஸ்குளுசிவ்லி டாட் காம் மூட திட்டம்
டாக்ஸி பார் ஷூர் மூடப்பட்டதை போல ஸ்நாப்டீல் நிறுவனம் கைய கப்படுத்திய Exclusively.com நிறுவ னத்தையும் விரைவில் மூட இருப் பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிறுவனத்தில் பெரும் பாலான பணியாளர்கள் ஸ்நாப்டீல் நிறுவனம் எடுத்துக்கொள்ளும் என்றும், சிலரை வெளியேற்ற நிறுவனம் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்னும் 60 நாட்கள் வரை இந்த இணையதளம் செயல்பாட்டில் இருந்தாலும், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையானவற்றை முன்பதிவு செய்யமுடியாது. முன்பதிவு செய்ய முயற்சிக்கும் பட்சத்தில், ஸ்நாப் டீல் இணையதளத்துக்கு செல்லும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ள தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தான் இந்த நிறுவனம் பிரத்யேக மாக செயலியை வெளியிட்டது குறிப் பிடத்தக்கது. பேஷன் ஆடைகள் பிரிவில் பலப்படுத்திக்கொள்வ தற்காக 18 மாதங்களுக்கு முன்பு Exclusively.com நிறுவனத்தை வாங் கியது ஸ்நாப்டீல். 2010-ம் ஆண்டு இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது.
செலவுகளை குறைத்து லாப பாதைக்கு செல்வதற்காக ஸ்நாப் டீல் இதுபோன்ற நடவடிக்கை எடுத் திருக்கிறது.
முன்னதாக ஸ்நாப்டீல் நிறுவனம் இ-ஸ்போர்ட்ஸ்பை நிறுவனத்தை கடந்த 2012-ம் ஆண்டு மூடியது குறிப்பிடத்தக்கது.