Published : 12 Jun 2016 11:36 AM
Last Updated : 12 Jun 2016 11:36 AM

தபால் துறை பேமென்ட் வங்கி: சிறந்த லோகோ வடிவமைப்புக்கு ரூ.50,000 பரிசு

தபால் துறையின் பேமென்ட் வங்கிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த நிலைமையில் இந்த பேமென்ட் வங்கிக்கான லோகோ வடிவ மைப்பு மற்றும் விளம்பர வாசகம் (டேக்லைன்) ஆகியவற்றை வடிமைப் பவர்களுக்கு ரூ.50,000 பரிசு வழங்க தபால் துறை திட்டமிட்டிருக்கிறது.

கடந்த ஜூன் 10-ம் தேதி முதல் இந்த போட்டி தொடங்கப்பட் டுள்ளது. வரும் ஜூலை 9-ம் தேதி வரை இந்த போட்டியில் கலந்து கொள்ளலாம். இந்திய குடிமக் கள், நிறுவனங்கள், விளம்பர நிறுவ னங்கள் என யார் வேண்டுமா னாலும் போட்டியில் கலந்துகொள் ளலாம் என்று தபால்துறை தெரிவித் துள்ளது.மத்திய அரசின் இணைய தளத்தில் (MyGov ) பதிவேற்றலாம். தேர்வுக்குழு மற்றும் வடிவமைப் பாளர்கள் சிறந்த 20 வடிவமைப்பை தேர்வு செய்வார்கள். அதன் பிறகு வாக்கெடுப்பு முறையில் சிறந்த லோகோ தேர்வு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ரூபாய் குறியீடு மற்றும் ஸ்வாச் பாரத் லோகோ ஆகியவையும் பொதுமக்களிடம் போட்டி வைத்தே தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது. இந்திய மக்களை அடிப்படையாக வைத்து இந்த வடிமைப்பு முடிவு செய்ய வேண்டும் என்று தபால்துறை கூறியுள்ளது.

800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தபால் துறை பேமென்ட் வங்கி தொடங்கப்படும். 3.5 லட்சம் பணி யாளர்கள் அயல்பணி மூலம் பேமென்ட் வங்கிக்காக செயல்படு வார்கள். பிறகு படிப்படியாக புதியவர்கள் நியமனம் செய்யப் படுவார்கள் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. புதிய நிறுவனத்தை கையாள பிரத்யேகமாக நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி, தலைமை நிதி அதிகாரி ஆகியோர் நியமனம் செய்யப்பட இருக்கிறார்கள்.

மாவட்ட தலைநகரங்களில் பேமென்ட் வங்கி

தபால் துறையின் பேமென்ட் வங்கி 650 கிளைகள் தொடங்க திட்டமிட்டிருக்கும் நிலையில் 2017-ம் ஆண்டு செப்டம்பருக்குள் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கிளை தொடங்க முடிவு செய்திருப்பதாக தபால் துறை பணியாளர்களுக்கு எழுதிய கடிதத்தில் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியிருப்பதாவது.

மாவட்ட தலைநகரங்களில் கிளைகள் அமைக்கப்பட வேண்டும் என்று பிரதமர் வலிவுறுத்தி இருப்பதாக தெரிவித்தார். செப்டம்பர் 2017-க்குள் மாவட்ட தலைநகரங்களிலும் அதன் பிறகு 2018-19-ம் ஆண்டில் அனைத்து இடங்களிலும் அமைக்க திட்டமிட்டிருக்கிறோம். அனைத்து தபால் துறை பணியாளர்களும் இதற்கு பங்களிக்க வேண்டும் இந்தியாவின் கடைசி மனிதனுக்கும் இந்த சேவை கிடைக்க வேண்டும்.

உங்கள் திறமை மீது எனக்கு சந்தேகம் இல்லை. உங்களது திறமை மற்றும் ஈடுபாடு இருக்கும் பட்சத்தில் இந்த இலக்கினை நாம் எளிதாக அடைய முடியும். நாடு முழுவதும் தபால்துறை பேமென்ட் வங்கியை கொண்டு செல்ல முடியும் என்று ரவி சங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x