Published : 09 Jul 2016 10:04 AM
Last Updated : 09 Jul 2016 10:04 AM

ரூ.2,240 கோடி வங்கி ஹவாலா மோசடி: வருவாய் உளவுத்துறை விசாரணையில் அம்பலம்

ரூ.2,240 கோடி தொகையை 6 பொதுத்துறை வங்கிகள் மூலம் சட்ட விரோதமாக அயல்நாட்டுக்கு அனுப்பிய வங்கி ஹவாலா மோச டியை வருவாய் உளவுத்துறை இயக்ககம் கண்டுபிடித்துள்ளது.

சரக்கு ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகர்கள் சிலரின் போலி ஆவணங்களின் பேரில் இந்த தொகை வங்கிகளிலிருந்து கை மாறி பிறகு வெளிநாடுகளுக்கு சென்றுள்ளது.

6 பொதுத்துறை வங்கிகளின் அதிகாரிகளின் துணையுடன் ஏற்றுமதி பில்களின் தொகையை கூடுதலாக காண்பித்ததோடு அல் லாமல் சில இல்லாத இறக்குமதி களின் பேரிலும் இந்த மோசடி நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட பொருட் களின் உண்மையான மதிப்பு ரூ.60 கோடிக்கு மேல் இல்லை, என்று பெயர் கூற விரும்பாத வருவாய் உளவுத்துறை இயக்குநரக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

போலி வர்த்தகக் கும்பல் தெற்கு மும்பையில் ஒரேயொரு அலுவலக அறையை எடுத்து அங்கிருந்து இந்த வேலைகளைச் செய்துள்ளனர். இந்த ரூ.2,240 கோடி தொகையில் ரூ. 1,398 கோடி ரூபாய் மாண்ட்வியில் உள்ள பஞ் சாப் நேஷனல் வங்கிக் கிளையிலிருந்தே சென்றுள்ளது தெரியவந்துள்ளது.

பண மோசடி

இது குறித்து டி.ஆர்.ஐ அதிகாரி கூறும்போது, “அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்ட மும் மீறப்பட்டுள்ளன. மறைவு வர்த் தகம் செய்துள்ள கும்பல் தற் போது தெற்கு மும்பை அலுவ லகத்தை காலி செய்து கொண்டு தலைமறைவாகியுள்ளனர்.

தெற்கு மும்பையில் உள்ள கனரா வங்கி கிளை ரூ.340 கோடி அளித்துள்ளது. முக்கால்வாசி போலி ஆவணங்கள் தெற்கு மும் பையில் உள்ள டிஸ்னி இண்டர் நேஷனல் என்ற நிறுவனம் தயா ரித்து அளித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

“வைர மற்றும் நகை வியாபாரிகள் வங்கி அதிகாரிகளின் உதவியுடன் இந்த மோசடியை நடத்தியுள்ளதாக நாங்கள் சந்தேகிக்கிறோம் ஐஸ்கேட் என்ற இ-பேமண்ட் வழியே நுழைவதற்கு இந்த போலி பில்களை சமர்ப்பிக்க அதிகாரிகள் உதவியுள்ளனர்” என்று வருவாய் உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து கனரா வங்கி பொதுமேலாளர் ஏ.கே.தாஸிடம் கேட்ட போது, அந்நியச் செலாவணி மோசடி குறித்த விசாரணையை டி.ஆர்.ஐ மேற்கொள்வதாக எங்களுக்கு எந்த செய்தியும் இல்லை, மும்பையில் இது குறித்த புகார்கள் இதுவரை எழுந்ததில்லை” என்றார்.

இது குறித்த விசாரணை முடியும் தறுவாயில் இருப்பதாக கூறிய வருவாய் உளவுத்துறை விரை வில் சிபிஐ மற்றும் அமலாக் கத் துறையிடம் விசாரணை அறிக் கையை சமர்ப்பிக்க வுள்ளதாக தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x