Published : 14 Nov 2013 03:22 PM
Last Updated : 14 Nov 2013 03:22 PM

வருமானம் என்றால் என்ன?

எல்லா முதலீடுகளும் வருவாயை எதிர்பார்த்து தான் செய்யப்படுகின்றன. இந்த வருவாய்கள் பல விதமாக இருக்கும். நிதி பத்திரங்களில் முதலீடு செய்யும் போது இரண்டு வித வருவாய்கள் பெறப்படும்.

ஒன்று குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து கிடைக்கும் வருவாய், மற்றொன்று நிதி பத்திரத்தை விற்கும் போது கிடைக்கும் வருவாய். இவற்றை ஒரு கடன் பத்திரம் அல்லது ஒரு பங்கு பத்திரம் கொண்டு விளக்கலாம்.

நீங்கள் ஒரு ரூ.1,000 முக மதிப்புள்ள கடன் பத்திரத்தை ரூ.600 என்ற சந்தை விலைக்கு வாங்குகிறீர்கள். இதனால் வருடம் தோறும் ரூ.100 வட்டி பெற்றால் இது ஒருவகை வருவாய். அந்த கடன் பத்திரத்தை சில காலம் சென்று ரூ.700-க்கு விற்றால் கூடுதலாக ரூ.100 கிடைக்கிறது. இது மற்றோரு வகை வருவாய். இதனை மூலதன ஆதாயம் (Capital Gain) என்பார்கள்.

இதே போல் ஒரு பங்கு பத்திரத்தை பார்ப்போம். ஒரு நிறுவனத்தின் பங்கு பத்திரத்தை ரூ.100-க்கு வாங்குகிறீர்கள். இந்நிறுவனம் வருடந்தோறும் ரூ.10-ஐ இந்த பங்கிற்கான லாபமாகக் கொடுக்கிறது. இதனை ஈவுத்தொகை (Dividend) என்பர். இந்தப் பங்கை சில வருடங்கள் கழித்து ரூ.200-க்கு விற்றால் உங்களுக்கு கூடுதலாக ரூ.100 கிடைக்கிறது. இதுவும் ஒரு வகை Capital Gain.

இவ்வாறு இரண்டு வகை வருவாய்களையும் சேர்த்து தான் நிகர வருவாய் கணக்கிட வேண்டும். இவ்வாறு நிகர வருவாய் கணக்கிட cash flow, Present Value, Discount Rate என்பவை பயன்படுத்தப்படுகின்றன.







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x