ரெபோ 0.25% அதிகரிப்பு எதிரொலி: பங்குச்சந்தைகளில் சரிவு

ரெபோ 0.25% அதிகரிப்பு எதிரொலி: பங்குச்சந்தைகளில் சரிவு
Updated on
1 min read

ரிசர்வ் வங்கியிடம் வங்கிகள் வாங்கும் குறுகிய காலக் கடனுக்கான (ரெபோ) விகிதம் 0.25 சதவீதம் உயர்த்தி, 8 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நிர்பந்தத்தால், இந்திய ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இதன் எதிரொலியாக, இந்தியப் பங்குச்சந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியின் மூன்றாவது காலாண்டு நிதிக்கொள்கை இன்று வெளியிடப்பட்டது. அதில், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக ரெபோ கால் சதவீதம் அதிகரிக்கப்பட்டது.

அதேவேளையில், வங்கிகளின் ரொக்கக் கையிருப்பு விகிதமான சி.ஆர்.ஆர். விகிதத்தை எந்த மாற்றமும் இல்லாமல், 4.0 சதவீதத்தில் நீடிக்கச் செய்துள்ளது ரிசர்வ் வங்கி.

நாட்டின் பொருளாதார மந்தநிலை தொடர்வது கவலை அளிப்பதாக உள்ளது என்று ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.

இதனிடையே, ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை அதிகரித்ததன் எதிரொலியாக, இந்தியப் பங்குச்சந்தைகளில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது.

மும்பை பங்குச்சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது, சற்றே ஏற்றம் கண்டிருந்த சென்செக்ஸ், ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்குப் பின், முற்பகல் 11.10 மணியளவில் 138.90 புள்ளிகள் சரிந்து 20,568.55 ஆக இருந்தது.

இதேபோல், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 37.75 புள்ளிகள் சரிந்து 6,098.10 ஆக இருந்தது. குறிப்பாக, வங்கித் துறையைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் கடும் வீழ்ச்சியைத் தழுவின.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in